திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு.. ரஜினி செய்திருக்கும் பிளான் இதுவா?.. மனைவி சொன்ன சூப்பர் விஷயம்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கும் அவர்; அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் எப்படி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதோ அதுபோல் கூலியும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆவல் ரஜினியின் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க அவர் திரைத்துறைக்கு இந்த வருடத்தோடு 50 வருடங்கள் நிறைவடைகின்றன.

ரஜினிகாந்த் என்றாலே அனைத்து தலைமுறையினர்களும் ரசிப்பார்கள். அவரது நடை, உடை, பாவனை, டயலாக் பேசும் விதம் என அத்தனையையும் ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியிலிருந்து இத்தனை வருடங்களாக கீழே இறங்காமல் இருக்கிறார். அதேபோல் அவரது வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக அவரது எளிமையையும் பலர் சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமைனா ரஜினிதான்: உதாரணமாக எந்திரன் திரைப்பட ஷூட்டிங்கிற்கு செல்ல தாமதம் ஆனதால் உடனடியாக ஒரு போக்குவரத்து காவலரோடு இரு சக்கர வாகனத்தில் ரஜினி சென்ற சம்பவம் எல்லாம் உண்டு. அதுமட்டுமின்றி தன்னுடைய வீட்டுக்கு யார் வந்தாலும் அவரை வாசல்வரை வந்து வரவேற்பதும், அவர்கள் கிளம்பும்போது வாசல்வரை சென்று அனுப்பிவைப்பதும் என அவ்வளவு எளிமையாக இருப்பாராம். அவரது எளிமைக்காகவும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Rajinikanth plants saplings to mark 50 years in the film industry
Photo Credit:

இப்போதும் ரஜினி பிஸிதான்: 60 வயதை கடந்தாலே பலர் உற்சாகத்தை இழந்துவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த்தோ அப்படி இல்லை. 70 வயதை கடந்த பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்த அவர் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த வயதில்கூட இப்படி ஓடுகிறாரே என்பதை பார்த்து அவருடன் பணியாற்றும் திரைத்துறையினரே ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா கூலி?: இடையே ரஜினிக்கு சில படங்கள் தோல்வியாக அமைந்தன. எனவே அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாக பலரும் பேசினார்கள். ஆனால் அந்தப் பேச்சையெல்லாம் ஜெயிலர் படம் தவிடுபொடியாக்கியது. அதேசமயம் அடுத்து வெளியான வேட்டையன் திரைப்படமோ சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இதன் காரணமாக வேட்டையனில் விட்டதை எப்படியாவது கூலியில் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸ்.

50 வருடங்கள் நிறைவு: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் லதா ரஜினிகாந்த் கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது திரைத்துறைக்கு வந்து 50 வருடங்கள் நிறைவு செய்ததையொட்டி ரஜினிகாந்த் பூமி ப்ராஜெக்ட் என்ற ஒன்றை தொடங்கி மரக்கன்றுகள் நடவிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X