Coolie Box Office: ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்.. 500 கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸ்.. கூலி முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: 2025ம் ஆண்டு வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்களும் வசூலை குவிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே 500 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இதுவரை ப்ரீ புக்கிங்கில் இந்தியாவிலும் ஓவர்சீஸிலும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை கூலி படைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் பிவிஆர், மாயாஜால் மற்றும் சிங்கிள் தியேட்டர் என அனைத்திலும் போடப்பட்ட அனைத்து காட்சிகளும் முதல் நாளில் புக் செய்யப்பட்டு ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளன. கூடுதல் காட்சிகளையும் திரையரங்குகள் ஒதுக்கி வருகின்றன.

Rajinikanth Rampage Coolie Box Office and Pre Sales crossed 500 Crores talks going on
Photo Credit:

இதுவரை காலை 9 மணி காட்சிக்கான அனுமதி கிடைக்கவில்லை என்பதால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் 11 மணி மற்றும் 12 மணிக்கு மேல் தான் டிக்கெட் புக்கிங்கை தொடங்கியுள்ளன. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் எல்லாம் அதிகாலை 6 மனிக்கே கூலி படம் திரையிடப்படுகிறது. கண்டிப்பாக காலை 9 மணி காட்சிக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

500 கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸ்: சன் பிக்சர்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு கூலி படத்தை விநியோகம் செய்து இப்போதே 500 கோடி வரை ப்ரீ ரிலீஸ் பிசினஸை முடித்து விட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. தியேட்டர் வசூலை தாண்டி நான் தியேட்டரிக்கல் வியாபாரம் மட்டும் 250 கோடி ரூபாய் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசனின் தக் லைஃப், அஜித்தின் குட் பேட் அக்லி போல இந்த படம் வியாபாரத்தில் தடுமாறாது என்றும் ஹைப்புக்கு ஏற்றவாறு படம் இருந்தால் தயாரிப்பாளரை போல விநியோகஸ்தர்களும் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள்.

உலகளவில் முதல் நாள் ப்ரீ டிக்கெட் சேல்: தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் கூலி படத்தை பார்க்க முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் புலம்பும் நிலை தான் உருவாகியிருக்கிறது. வெளிநாடுகளில் நள்ளிரவு 2 மணிக்கும் ஷோ போடப்பட்டு இருப்பதாக ரஜினி ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர். இதுவரை உலகளவில் 61 கோடி ரூபாய் ப்ரீ டிக்கெட் சேல்ஸ் வசூல் வந்திருப்பதாக கூறுகின்றனர். இன்னும் 2 நாள் உள்ள நிலையில், 100 கோடி ரூபாய் வரை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலமே வசூல் குவியும் என்றும் 150 கோடி வரை முதல் நாள் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.6 லட்சம் டிக்கெட்டுகள்: தமிழ்நாட்டில் மட்டும் 6.6 லட்சம் டிக்கெட்டுகள் இதுவரை சேல்ஸ் ஆகியிருப்பதாகவும் 14 கோடி ரூபாய் வரை ப்ரீ சேல்ஸ் ஆகியிருப்பதாக ரமேஷ் பாலா உள்ளிட்டோர் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக முதல் நாள் ஓபனிங் 30 கோடிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லால் சலாம், வேட்டையன் படங்கள் மாதிரி சொதப்பாமல், ஜெயிலர் படத்தை போல வசூல் மழையை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீர்கான் நடித்துள்ள நிலையிலும், இந்தி பெல்ட்டில் பெரிதாக டிக்கெட் புக்கிங் நடைபெறவில்லை என்பது சற்றே ஏமாற்றம் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X