Rajinikanth: முருகதாஸ் படத்தில் நடிக்க சம்பளத்தை குறைத்த ரஜினி?

By Siva

Recommended Video

Rajini166: ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் சம்பளத்தை குறைத்தார் ரஜினிகாந்த்- வீடியோ

சென்னை: ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பேட்ட படம் வெற்றி அடைந்துள்ளது. இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.

முருகதாஸ், ரஜினி கூட்டணி சேரும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 2.0 பட பாக்ஸ் ஆபீஸ் வியாபாரம் தான் இந்த சம்பள குறைப்புக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகள் செய்தது. ஆனால் ரூ. 543 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்காமல் போனது. 2.0 படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

லைகா

லைகா

2.0 படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட முடியாவிட்டாலும் அது தயாரிக்கும் அடுத்த படத்தில் சம்பளத்தையாவது குறைத்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் தீர்மானித்துள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யாவின் மறுமண வேலைகளில் பிசியாக உள்ளார். சவுந்தர்யாவின் மறுமணம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X