Rajini - தனுஷ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்.. இதுதான் காரணமா.. வேற லெவலா இருக்கே
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று இருவரது திருமண வாழ்க்கையும் பிரிவில் முடிந்தது. இருவரும் பிரிந்தாலும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தனுஷ் இயக்கத்தில் நடிக்காததற்கான காரணத்தை ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சினிமாவில் ஈடுபடாமல் இருந்தார்கள். ஒருகட்டத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இளைய மகள் சௌந்தர்யா கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌந்தர்யா அஷ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில காரணங்களால் அஷ்வின் சௌந்தர்யாவை பிரிந்தார்.

இரண்டாவது திருமணம்: இதனையடுத்து நடிகர் விசாகனை காதலித்த சௌந்தர்யா இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்திவைத்த ரஜினிகாந்த்தை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக ஒரு தந்தையாக ரஜினிகாந்த் தனது மகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டார் என்று அனைவருமே கூறினார்கள். தற்போது விசாகன் - சௌந்தர்யா திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா: இதற்கிடையே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கையும் 15 வருடங்களுக்கும் மேலாக சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார்கள். தங்களது தனித்தனி வழிகளில் தாங்கள் செல்கிறோம் என்று அறிவித்தாலும்; சட்டப்படி விவாகரத்து இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இணைத்துவைக்க முயற்சி?: இருவரும் விவாகரத்து பெறாததால் மீண்டும் அவர்களை இணைத்துவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக அரசல் புரசலாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த்தேகூட இரண்டு பேரிடமும் நேரடியாக பேசியதாகவும்; இருவரது மனதும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இரண்டு மகன்களின் எதிர்கால நலனை கருதி தனுஷும், ஐஸ்வர்யாவும் விரைவில் இணைவார்கள் என்பதே பெரும்பாலானோரின் கருத்து என்பது கவனிக்கத்தக்கது.
லால் சலாம்: இந்தச் சூழலில் ஐஸ்வர்யா தற்போது ரஜினிகாந்த்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே தனது இளைய மகள் இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினி; தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்திருப்பதால் மகளுக்காகத்தான் இந்தப் படத்தில் நடித்தார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் லால் சலாமில் நடிக்க அதுமட்டுமே காரணம் இல்லை என்று ஆடியோ லான்ச்சில் விளக்கினார் ரஜினிகாந்த்.
தனுஷ் இயக்கத்தில்: விழாவில் பேசிய அவர், "கோச்சடையான் படத்தில் நடித்தபோதுகூட கே.எஸ்.ரவிக்குமாரை அருகில் வைத்துக்கொண்டேன். ஏனெனில் பல முக்கியமான இயக்குநர்கள் கேமரா, ஆக்ஷன், கட் சொல்லி நடித்த என்னால் எனது மகள்கள் அப்படி சொல்லி நடிக்கக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தேன். தனுஷேகூட எனக்காக இரண்டு கதைகளை வைத்திருந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதற்கான காரணத்தையும் அவர் புரிந்துகொண்டார். அதேபோல் லால் சலாம் படத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா எனது மகள் என்பதால் மட்டுமே கிடையாது" என்றார்.
தனுஷ் தயாரிப்பில்: தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றாலும் அவரது தயாரிப்பில் காலா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இப்போது தனது 50ஆவது படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











