அமிதாப்பை இந்தியில் பார்த்து அப்படியே தமிழில் செய்த ரஜினி: எப்பாடி எவ்வளவு படம்…!?

சென்னை: ரஜினிகாந்த் ரீமேக் செய்து வெற்றிபெற்ற அமிதாப்பச்சன் படங்களை பார்க்கலாம்.

ஓரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதே படத்தை பிறமொழி நடிகர்களை நடிக்க வைத்து குறிப்பிட்ட பிராந்தியத்தில் வெற்றி பெறுவது சினிமாவில் கையாளப்படும் வியாபாரத் தந்திரம்.

வியாபார ரீதியில் இல்லாமல் நல்ல கதைக்காகவும் படங்களை ரீமேக் செய்வதுண்டு. இந்தியின் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

அப்படி ரீமேக் செய்யப்பட பல அமிதாப் பச்சன் படங்கள் தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றுள்ளன.

பில்லா

பில்லா

ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. ரஜினிகாந்த் ஸ்ரீப்ரியா, பாலாஜி, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் பில்லா. ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்த படம். இது 1978ஆம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் ஜீனத் அமன், ஹெலன் நடித்து வெற்றிபெற்ற டான் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதுக்கு பிறகு பில்லா, பில்லா 2 என்று அஜித் நடித்தார். தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தீ

தீ

அண்ணன் தம்பி கதையில் அண்ணன் மிகப்பெரிய கடத்தல்காரனாகவும் தம்பி அண்ணனை கைதுசெய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் கதையமைக்கப்பட்டு வெற்றி கண்ட திரைப்படம் தீ. இதில் கடத்தல் பண்ணக்கூடிய ராஜாவாக, மிகப்பெரிய நிழல் உலக தாதாவாக ரஜினிகாந்த் நடித்திருப்பார். அவரைத் தேடிப்போகும் போலீஸ் அதிகாரியாக சுமன் நடித்திருப்பார். இத்திரைப்படம் யஷ் சோப்ரா இயக்கத்தில் அமிதாப் பச்சன், சசி கபூர், நிருபா ராய், ரீத்து சிங் மற்றும் பலர் நடித்து 1975ல் வெளியான தீவார் என்ற இந்திப் படத்தின் ரிமேக். அதில், அமிதாப் பச்சன் கடத்தல் செய்யும் விஜய் வர்மாவாகவும், சசி கபூர் ரவி வர்மா என்ற போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பர்கள்.

படிக்காதவன்

படிக்காதவன்

ராஜசேகரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் அம்பிகா, நாகேஷ், ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன் நடித்து 1985 ல் வெளியான திரைப்படம் படிக்காதவன். இந்த படமும் அமிதாப் பட ரீமேக் தான். ரவி டாண்டன் இயக்கதில் அமிதாப், சஞ்சீவ் குமார், வினோத் மெஹ்ரா மற்றும் பலர் நடித்து 82ல் வெளியான படம் குத் தார். இந்த படம் ரிலீஸான போது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தார் அமிதாப். இன்றைக்கும் படிக்காதவன் படத்தில் வரும் ஊரைத்தெரிஞ்சுகிட்டேன் பாட்டு வேதனையின் விளிம்பில் இருப்பவர்களின் தேடலாய் இருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம், ரெண்டு படத்திலுமே முக்கிய அம்சமா இருக்கும் ஹீரோவின் காருக்குப் பெயர் லஷ்மி தான்.

தர்மத்தின் தலைவன்

தர்மத்தின் தலைவன்

தென் மதுரை வைகை நதி... என்ற பாடலை எப்போதாவது ரேடியோவில் கேட்டாலோ அல்லது ஊர்பக்கம் பேருந்தில் கேட்டாலோ நமக்கு தர்மத்தின் தலைவன், ஞாபகமறதி ரஜினிகாந்த், அண்ணன் தம்பி பாசம் எல்லாம் ஞாபகம் வரும். ரஜினி, பிரபு, குஷ்பு, சுகாசினி நடித்த படம் தர்மத்தின் தலைவன். அட இந்த படமாவது சொந்தமா தமிழ்ல எடுத்தாங்களா அப்படினா அதுதான் இல்லை. இதுவும் உயர்ந்த மனிதர் அமிதாப் பச்சன் படத்தின் ரீமேக் தான். ரமேஷ் பெஹ்ல் இயக்கத்தில் அமிதாப், ராக்கி, ரந்திர் கபூர், நீத்து சிங் நடித்து 1978ல் வெளியான "கஸ்மே வாடே" என்ற திரைப்படத்தின் ரீமேக்.

மிஸ்டர் பாரத்

மிஸ்டர் பாரத்

என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று சத்யராஜும் ரஜினிகாந்தும் போட்டி போட்டு பாடிய பாடல் யாரால் மறக்க முடியும். ரஜினிக்கு சத்யராஜுக்கும் மிக சிறந்த வெற்றிப்படமாக விளங்கியது எஸ்பி.முத்துராமன் இயக்கிய மிஸ்டர் பாரத். இதுவும் அமிதாப் பச்சன் படத்தின் தமிழ் ரீமேக் தான். யஷ் சோப்ரா இயக்கத்தில் அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், சசி கபூர், ஹேமமாலினி நடித்த படம் த்ரிஷுல். இது 1978ஆம் ஆண்டு வெளியானது. வெளியாகி கிட்டதட்ட ஏழு வருடங்கள் கழித்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

சிவா

சிவா

இதே மாதிரி, பணக்காரன், சிவா, வேலைக்காரன், மாவீரன், என்று ஹிட் அடித்த பல ரஜினி படங்கள் ஏற்கனவே இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து ஹிட்டான படங்கள். இதில் அதிசயம் என்னவென்றால் பெரும்பான்மையான ரீமேக் படங்கள் ரஜினிக்கு வெற்றியைத் தேடித் தந்தவை என்பதுதான். இது எப்படி என்று ஆராய்ச்சி செய்யாமல் கவுண்டமனி ஸ்டைலில் "இதெல்லாம் சூப்பர் ஸ்டாருங்கக்குள்ள சாதாரணமப்பா" என நினைத்துக்கொள்வோம் மக்களே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X