Rajini Speech.. எதார்த்தம்னா ரஜினிதான்.. கமல் ரசிகர்னு சொன்ன லோகேஷை செஞ்சுட்டாரே.. நெல்சனையும் விடல

சென்னை: கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கூலி படக்குழுவும் கலந்துகொண்டார்கள். அனைவரது கவனமுமே ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்பதில்தான் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடியே நேற்றைய தனது பேச்சிலும் பட்டாசாக வெடித்தார் ரஜினி. முக்கியமாக லோகேஷை வைத்து செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதில் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் திரைத்துறையை சேர்ந்த ஸ்டார்கள் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம்தான் தமிழில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யக்கூடிய முதல் படம் என்ற ஆரூடங்களையும் பலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

கூலி இசை வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழா தொடங்கியவுடன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் சந்தோஷமாக இருந்தாலும் ட்ரெய்லரில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறதே என்று வருத்தப்பட்டார்கள். அதேசமயம் ரஜினியின் எனர்ஜியை பார்த்து வாயடைத்து போனார்கள். கண்டிப்பாக படத்தில் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்டை இயக்குநர் வைத்திருப்பார் என்பதும் அவர்களது நம்பிக்கை.

Rajinikanth Roasts Lokesh Kanagaraj for calling him a Kamal fan at the Coolie Audio Launch
Photo Credit:

ரஜினி மீது கவனம்: இசை வெளியீட்டு விழா என்றாலே அதில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதைத்தான் அன்றைய தினம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்க்கும். அவரும் எந்த ஈகோவும் இல்லாமல் கேஷுவலாகவும், நகைச்சுவையாகவும் பேசிவிட்டு செல்வார். ஜெயிலர், வேட்டையன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லாம் அவரது பேச்சு அனைவராலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் சொன்னது: லோகேஷ் கனகராஜ்கூட ஒரு பேட்டியில், 'ரஜினியிடம் நான் சென்று கமலின் ரசிகர் என்று சொன்னேன். அதற்கு அவரோ உங்களை நான் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார்' என்றார். அவர் அப்படி சொன்னதிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் என்ன பேசப்போகிறார் என்ற ஆவல் நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்குமே மேலோங்கி இருந்தது. எதிர்பார்த்தபடியே தனது பேச்சில் வைத்து செய்துவிட்டார் ரஜினி.

என்ன சொன்னார் ரஜினி?: அவர் பேசுகையில், "கைதி படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என சொன்னார்கள். நானும் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. உடனே லோகேஷுக்கு ஃபோன் செய்து, 'யாரும் உங்களிடம் முந்துவதற்கு முன்பு இங்கே வந்துவிடுங்கள்' என கூறினேன். அவரும் வந்தார். வந்தவரிடம் நான், 'எனக்கு ஏதும் சப்ஜெக்ட் இருக்கா' என்று கேட்டேன். இருக்கு சார் என்று கூறினார்.

லோகேஷிடம் நான் கேட்டேனா?: அப்படி சொல்லிவிட்டு அவர் என்னிடம், 'நான் கமல் சார் ஃபேன்' என்று சொன்னார். நீங்கள் கமல் ஃபேனா என்று நான் கேட்டேனா?.. நெல்சன் திலீப்குமார் வீட்டுக்கு வந்து நல்ல காஃபி இருக்குமா என கேட்கிறார்; இவரோ வீட்டுக்கு வந்து நான் கமலின் ரசிகர் என சொல்கிறார்" என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்களோ, எதார்த்தம்னா அது ரஜினிதான். ஈகோவே இல்லை அவருக்கு என புகழ்ந்தும்வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X