»   »  ஷங்கரின் 2.0 படத்தில் எத்தனை ரஜினி தெரியுமா?

ஷங்கரின் 2.0 படத்தில் எத்தனை ரஜினி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படத்தில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 2.0. எந்திரன் படத்தில் ரஜினி வசீகரன், சிட்டி ஆகிய 2 கதாபாத்திரங்களில் நடித்தார்.

எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் ரஜினி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். மூன்றாவது கதாபாத்திரம் படத்தின் ஹைலைட்டாம். மூன்றாவது ரஜினி கதாபாத்திரம் ரோபோவாம்.

Rajinikanth's 2.0 will have 3 Rajinis

எந்திரன் படத்தில் பலியான வில்லனின் மகன் கெட்ட சிட்டி ரோபாவின் கோடுகளை வைத்து ஒரு கெட்ட ரோபோவை உருவாக்குகிறாராம். அந்த தீய ரோபோ வேறு யாரும் அல்ல ரஜினி தான்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கெட்ட விஞ்ஞானியாம். ரஜினி தன்னிடம் உள்ள நல்ல ரோபோவை வைத்து கெட்ட ரோபோ மற்றும் அக்ஷய் குமாரை எப்படி அழிக்கிறார் என்பதை ஷங்கர் வித்தியாசமாக காட்டுகிறாராம்.

English summary
According to reports, Rajinikanth is playing three roles in his upcoming movie 2.0 being directed by Shankar.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil