ரஜினியின் 'வளர்ப்பு மகனுக்கு' இன்று 39வது பிறந்தநாள்!!

By Siva

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக இந்தி படத்தில் நடித்த நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி சூசன் சொகுசு படகில் பிரபலங்களுக்கு நேற்று இரவு பார்ட்டி கொடுத்தார். பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகனான ரித்திக் ஆஷா என்னும் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு ஆப் கே தீவானே என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ரித்திக் ரோஷன் அபிஷேக் பச்சன் மற்றும் கரீனா கபூர் அறிமுகமான அதே ஆண்டில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் கைட்ஸ் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோபாரா ஆகிய படங்களில் பாடியுள்ளார். இளம் வயதில் அவருக்கு பேசுவதில் சிரமம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் வளர்ப்பு மகன்

ரஜினியின் வளர்ப்பு மகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பகவான் தாதா என்ற இந்தி படத்தில் அவரின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார் இளம் வயது ரித்திக்.

முதல் படத்துக்கே 102 விருதுகள்

முதல் படத்துக்கே 102 விருதுகள்

ரித்திக் ரோஷன் தனது தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான கஹோனா பியார் ஹே படம் 102 விருதுகளை வாங்கி லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது.

வலது கையில் ஆறு விரல்

வலது கையில் ஆறு விரல்

ரித்திக்கிற்கு வலது கையில் இரண்டு பெருவிரல்கள் அதாவது ஆறு விரல்கள் உண்டு. அது ராசி என்பதால் ஆறாவது விரலை அவர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவில்லை.

பாம்பா மனுஷனா

பாம்பா மனுஷனா

ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடினால் கண் இமைக்காமல் பார்க்கத் தோன்றும். மனிதர் அந்த அளவுக்கு ஆடுவார். அவர் எவ்வளவு பெரிய கூட்டத்தில் ஆடினாலும் அவர் டான்ஸ் மட்டும் தனித்து தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X