ரஜினிகாந்தால் மனம் மாறிய கார்த்தி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிவுரையைக் கேட்டு கார்த்தி தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு பருத்தி வீரன் படம் மூலம் நடிகரானவர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. கேமராவுக்கு பின்னால் நிற்க விரும்பிய கார்த்தி நல்ல கதை கிடைத்ததும் மனதை மாற்றிக் கொண்டு நடிகரானார். அவரின் முதல் படமே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
முதலில் பருத்தி வீரன் போஸ்டரைப் பார்த்தவர்கள் யாருய்யா, இந்த ஆளு என்று நினைத்தனர். படத்தைப் பார்த்த பிறகு கார்த்தி மக்கள் மனதை கவர்ந்துவிட்டார். முதல் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

ஸ்லோவாக செல்லும் கார்த்தி
கார்த்தி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்து நடிக்கிறார். 2007ல் இருந்து இதுவரை அவர் பையா, சிறுத்தை, சகுனி உள்ளிட்ட 7 படங்களில் தான் நடித்துள்ளார். கோ படத்தில் ஒரு சீனுக்கு வந்து செல்வார்.

ரஜினி சொன்ன அட்வைஸ்
இளம் நடிகர்கள் பார்த்து பார்த்து நடிக்கக் கூடாது. பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது தான் அவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் நல்லது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ரஜினியால் மனம் மாறிய கார்த்தி
ரஜினியின் அறிவுரையை ஏற்று கார்த்தி இனி பல வகை கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மசாலா படங்களில் நடித்து வந்த கார்த்தியை இனி வித்தியாசமான கதாபாத்திரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











