ஆஹா ரஜினியை இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு?.. தில்லுமுல்லு கெட்டப்.. எந்தப் படத்துக்கு?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் தோல்வியை அடுத்தடுத்த படங்களான ஜெயிலர் 2, தலைவர் 173 ஆகியவற்றில் சரிக்கட்ட முழு முனைப்போடு இருக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ரஜினியின் புதிய கெட்டப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் கூலி திரைப்படம் வெளியானது. இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் லோகேஷ் சென்சேஷனலாக இருக்கிறார். எனவே அவர் ரஜினியை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. விக்ரம் படம் போல் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருந்த தலைவரின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சிதான் இருந்தது. படத்தில் ஒரு விஷயம்கூட யாரையும் கவரவில்லை என்பதே உண்மை.

ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதில் ரஜினிகாந்த்துக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் படத்தின் பணிகளையும் 90 விழுக்காடு வரை இயக்குநர் முடித்துவிட்டார் என்றும்; படத்தை ஜூன் மாதத்திலேயே ரிலீஸ் செய்வதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓட ஆரம்பித்திருக்கிறது.
கமல் தயாரிப்பில் ரஜினி: ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் தனது 173ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் அவர். முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் வெளியேறியதால் சிபி உள்ளே வந்தார். இந்தப் படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும் என சத்தியம் செய்திருக்கிறார் இயக்குநர். இது எந்த மாதிரியான ஜானரில் வரப்போகிறது என்ற ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கலாம் என தெரிகிறது.
கமலுடன் நடிக்கும் ரஜினி: இதற்கிடையே ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கப்போகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே தகவல் வந்தது. அது தலைவர் 173 படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டானது. ஆனால் 174ஆவது படத்தில்தான் கமலுடன் சேர்ந்து நடிக்கிறார் ரஜினி. அப்படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் சொன்ன கதையில் உடன்பாடு இல்லாததால் நெல்சனை ஃபிக்ஸ் செய்தார்கள் ரஜினியும் கமலும்.
ப்ரோமோ ஷூட்: இப்படத்துக்கான ப்ரோமோ ஷூட் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. அதில் இரண்டு பேரும் 80ஸ் ரெட்ரோ கெட்டப்பில் இருந்ததாகவும்; கார் சாவியை கமலிடம் ரஜினி தூக்கி போட்டு ஸ்டைலாக வந்து அமர்ந்துகொண்டு; அந்த காரில் இரண்டு பேரும் கிளம்புவது போன்று நெல்சன் ஷூட் செய்தார் என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். மேலும் இப்படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
தில்லுமுல்லு கெட்டப்: இந்நிலையில் ரஜினியின் புதிய கெட்டப் அதீத கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது க்ளீன் ஷேவ் செய்து மீசை, தாடி இல்லாமல் இருக்கும் அவரை பார்த்து அனைவருமே ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். கடைசியாக தில்லுமுல்லு, எந்திரன் படங்களுக்காக இந்த கெட்டப்பில் இருந்தார். அநேகமாக இந்த கெட்டப் கமலுடன் நடிக்கும் படத்துக்காக இருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அவரது புதிய கெட்டப் ஃபோட்டோ ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











