யோகி பாபுவுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார்... தர்பார் ஷூட்டிங் இன்றே கடைசி!
சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் பட கடைசி நாள் ஷூட்டிங் சென்னையில் இன்று நடக்கிறது. இதோடு இதன் படப்பிடிப்பு முடிகிறது.
பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. இதன் பாடல்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் ஷூட்டிங், சென்னையில் இன்று நடக்கிறது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெறுகின்றனர்.

யோகிபாபு பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்காகக் காத்திருந்து இன்று ஷூட்டிங் நடப்பதாகக் கூறப்படுகிறது.
'யோகிபாபு வரும்போது ஷூட்டிங் வச்சுக்கலாம்' என்று ரஜினி சொன்னாராம். அதுதான் ரஜினியின் பெருந்தன்மை என்கிறது படக்குழு.
தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











