ரஜினி யூடியூபில் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி இதுவா?.. வந்துட்டாங்களானு கேட்டுட்டே இருப்பாராம்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கூலி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார். முதல் பாகம் போன்றே இந்தப் பாகமும் பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது. இந்ந்லையில் யூடியூபில் அவர் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி பற்றி தெரியவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார், தலைவர் என்று கொண்டாடப்படும் ரஜினிக்கு இப்போது 75 வயது ஆகும். இந்த வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்த வருடம் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருந்தார். முதன்முறையாக லோகேஷுடன் கூட்டணி வைத்திருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருந்தது. பான் இந்தியா ஸ்டார்கள் எல்லாம் இந்தப் படத்தில் களமிறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோசமான தோல்வி: ஆனால் ரசிகர்களுக்கு படம் பெரிய திருப்தியை கொடுக்கவில்லை. சுமாரான கதையை ரொம்ப ரொம்ப மோசமாக ப்ரசென்ட் செய்திருந்த லோகேஷ்; திரைக்கதையிலும் சொதப்பி வைத்திருந்தார். இதன் காரணமாக படம் தோல்வியை சந்தித்தது. முக்கியமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜை வைத்து செய்துவிட்டார்கள். அவரது உச்சக்கட்ட மார்க்கெட்டை கூலி தோல்வி பெரிய அளவில் அசைத்தும் பார்த்துவிட்டது.

Rajinikanth s Favourite YouTube Show Revealed Amid Jailer 2 Buzz After Coolie Flop
Photo Credit:

ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. இதன் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்று உலகளவில் 700 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் காரணமாக இரண்டாவது பாகமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று நம்பிக்கை நிலவுகிறது. குறிப்பாக இதன் கதை எந்த மாதிரியாக ட்ராவல் ஆகும் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

கமல் தயாரிப்பில் ரஜினி: ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முதலில் அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற சிபி உள்ளே வந்திருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கிய டான் படம் 100 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. அதே வைபை இதிலும் இயக்குநர் தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரஜினி விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி: இப்படி 75 வயதிலும் ஓடி ஓடி நடித்துவரும் ரஜினிகாந்த் யூடியூபில் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ரஜினியை பற்றி எங்கள் நிகழ்ச்சியில் நாங்கள் நெகட்டிவ்வாகவும் சொல்லியிருக்கிறோம். ஆனால் அவரோ தினமும் வலைப்பேச்சு நிகழ்ச்சியை பார்த்துவிடுவாராம். மாலை ஆறு மணி ஆனாலே அவர்கள் வந்துவிட்டார்களா? அவர்கள் சொல்வதில் கண்டிப்பாக புதிய செய்தி இருக்கிறது என கூறுவாராம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X