சார் 60 வயது பெரியவர்னு ஆரம்பித்த போஸ் வெங்கட்.. ரஜினி கொடுத்த செம பதிலடி!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் மூன்று படங்கள் மீதும் ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அந்த படங்களில் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இருபெரும் ஆளுமைகள் பல வருடங்கள் கழித்து இணைந்திருக்கிறார்கள். நிச்சயம் அப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் படமாக மாறுமென பலர் நம்புகிறார்கள்.
ரஜினிகாந்த் என்றாலே ஆச்சரியம்தான். அவருக்கு வயது இப்போது 75. 30 வயதிலேயே உழைப்பதற்கு பலர் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அவரோ இத்தனை வயதிலும் இளைஞர் மாதிரி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். 'இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது' என வைரமுத்து எழுதியது ரஜினிக்கு நூறு விழுக்காடு பொருந்தும். அவருக்கு முதுமை என்ற ஒன்று வயதில் மட்டும்தான் வருகிறது.

இப்போதும் தனி சாம்ராஜ்ஜியம்: ரஜினி இப்போது வீழ்ந்து அப்போது வீழ்ந்துவிடுவார் என எப்போதும் ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. பாபா, லிங்கா, கோச்சடையான், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் தோல்வியடைந்தபோதெல்லாம் இனிமேல் அவ்வளவுதான் என்று கட்டியம் சொன்னார்கள். ஆனால் சூப்பர் ஸ்டாரோ அவை அனைத்தை அடித்து நொறுக்கி தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே இப்பொதும் தக்க வைத்திருக்கிறார்.
விமர்சனமும் உண்டு: லிங்கா படம் வரையெல்லாம் ரஜினி மீது கடுமையான ஒரு விமர்சனம் இருந்தது. அதாவது, வயதான காலத்தில் இளம் ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார். அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரேயா உள்ளிட்டோர் எல்லாம் அவருக்கு மகள் வயது என கடுமையாக சாடினார். அதுவும் சிவாஜி படத்தின்போதெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் அதிகம் இருந்தது நினைவுகூரத்தக்கது.
ட்ரெண்டாகும் போஸ் வெங்கட் பேட்டி: இந்நிலையில் சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "சிவாஜி க்ளைமேக்ஸ் ஷூட்டிங் பெங்களூருவில் எடுத்தார்கள். அப்போது வந்த ரஜினியிடம், சார் நான் ஒரு மலையாள படம் பார்த்தேன். மோகன் லால் பின்னியெடுத்துவிட்டார் என சொன்னேன். அதற்கு அவர், என்ன கதை?' என கேட்டார்.
60 வயது கிழவன்: நான், 'சார் ஓபன் பண்ணா 60 வயது கிழவன்' என சொல்ல தொடங்கினேன். அவர் எதுவுமே சொல்லாமல் போய்விட்டார். கொஞ்ச் நேரம் கழித்து ஷங்கர் உள்ளிட்டோர் வந்து, 'ரஜினியிடம் எப்படி பேச வேண்டும் என தெரியாதா?' என கேட்டுவிட்டு சென்றார்கள். மேலும் எனக்கு ஷாட்டே எடுக்கவில்லை. எல்லோரும் இப்படி கோபப்படுறாங்களே என ஒரு மாதிரி ஆகிவிட்டது. மாலை ரஜினி அங்கிருந்து கிளம்பினார். நான் அவர் கார் அருகில் சென்று நின்றேன்.
கலாய்த்த ரஜினி: எனது கண்கள் எல்லாம் கலங்கியிருந்தன. அவர் என்னை பார்த்து, 'என்ன?' என கேட்டார். 'சார்.. நான் தவறாக பேசிவிட்டேனா? ரொம்ப கஷ்டமா இருக்கு' என கூறினேன். உடனே அவர் சத்தமாக சிரித்துவிட்டு, 'என்னிடமே 60 வயது கிழவன் என சொல்கிறீர்களே' என கேட்டுவிட்டு, 'போஸ் வெங்கட்டுக்கு இன்று ஷாட் இருக்கிறதா என ஷங்கரிடம் கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னார். அதுதான் மாலை வரை உங்களை சும்மா கலாய்த்தோம் என கூறினார். அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
