சந்திக்க வந்த அரசியல் தலை.. காக்க வைக்கப்பட்ட டிராகன் இயக்குநர்.. மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கூலி திரைப்படம் ரஜினியின் கரியரில் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு தோல்வி படமாக அமைந்துவிட்டது. லோகேஷின் மார்க்கெட்டையும் அப்படம் அசைத்து பார்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக ரஜினிகாந்த் ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173, கமல்ஹாசனுடன் KHXRK என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதற்கிடையே தலைவர் 173 படத்தை அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது.

ரஜினிகாந்த்தின் கவனம் இப்போது இளம் இயக்குநர்களை நோக்கி திரும்பியிருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் இளம் டேலண்ட்டுகளை நம்ப வேண்டும் என்கிற மனநிலைக்கு அவர் வந்திருக்கிறார். 75 வயதிலும் இப்படி தீராத தேடலுடனும், வற்றாத ஆர்வத்தோடும் பணியாற்றும் அவரை பார்த்து அனைவருமே ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். சமீபத்தில்கூட கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, ரஜினி சார் தன்னுடைய அடுத்த ஐந்து வருட பிளானை என்னிடம் சொன்னார் என கூறி ஆச்சரியப்பட்டார்.

Rajinikanth s Humility Leaves Ashwath Marimuthu Stunned Viral Interview
Photo Credit:

நிதானத்தில் ரஜினி: இடையே ரஜினிக்கு தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே தோல்விடைந்தன. எனவே அவரது கரியர் இனிமேல் அவ்வளவுதான் என்று கூச்சலிட்டார்கள். ஆனால் கம்பேக் கொடுப்பதில் எப்போதுமே முரட்டுக்காளையாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தில் மெகா ஹிட்டை கொடுத்தார். ஆனால் அந்த வெற்றியை அடுத்தடுத்து வந்த வேட்டையன், கூலி ஆகிய படங்களில் தவறவிட்டார். இருப்பினும் அடுத்து வரவிருக்கும் ஜெயிலர் 2, தலைவர் 173, KHXRK ஆகிய படங்களில் வெற்றியை அறுவடை செய்துவிடலாம் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாய்ப்பு: இதற்கிடையே தலைவர் 173 படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் வெளியேறினார். சுந்தர் வெளியேறியதை தொடர்ந்து யார் அந்தப் படத்தை இயக்குவார் என்ற ஆவல் இருந்தது. வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றன. இறுதியாக சிபி சக்கரவர்த்திக்கு அந்த வாய்ப்பு சென்றிருக்கிறது. இந்நிலையில் ரஜினியை சந்தித்து கட்தை சொன்ன அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் அஸ்வத்.

Also Read
விஜே பார்வதி மீது வருத்தம் இருக்கலாம்.. விஜய் சேதுபதி பளீச்.. பிக்பாஸில் நடந்தது இன்னும் மறக்கல
விஜே பார்வதி மீது வருத்தம் இருக்கலாம்.. விஜய் சேதுபதி பளீச்.. பிக்பாஸில் நடந்தது இன்னும் மறக்கல

அஸ்வத் பேட்டி: அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில், "கூலி படத்துக்கு பிறகு ஒரு திங்கட்கிழமையில் அந்த மீட்டிங்கை ரஜினி வைத்திருந்தார். நான் சீக்கிரம்தான் சென்றேன். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் வந்து காத்திருந்தார். இளைய இயக்குநர்களிடம் அவர் காட்டும் மரியாதையை பார்த்து எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும்தான் ஏற்பட்டது. அந்த சமயம் பார்த்து ஒரு பெரிய அரசியல் தலைவர் ரஜினியை பார்க்க வந்தார். உடனே இவரோ அவரை சந்திப்பதற்கு என்னிட்ம் அனுமதி கேட்டார். அதுமட்டுமின்றி மன்னிப்பும் கேட்டார்.

மேனேஜர் சொன்னது: நான் வெளியே காத்திருக்க ஆரம்பித்த பத்தே நிமிடங்களில் அவரது மேனேஜர் என்னிடம் வந்து, 'உங்களை காத்திருக்க வைத்ததற்கு ரஜினி மன்னிப்பு கேட்டார். அவரது மனம் வருத்தப்பட்டது' என சொன்னார். அவருக்காக நான் மூன்று நாட்கள்கூட காத்திருக்க தயார். கதை சொல்ல ஆரம்பிக்கும்போதும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டர். நான் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. சில காரணங்களால் செய்ய முடியவில்லை. நான் அங்கிருந்து கிளம்பும்பொதும் அவர் என்னிடம் மன்னிப்புதான் கேட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X