ரஜினியின் கோச்சடையான் மீண்டும் களம் இறங்குகிறது.. சௌந்தர்யாவின் டெக்னாலஜி சவால்!
சென்னை: இந்திய சினிமாவில் மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய துணிச்சலான முயற்சியாக நினைவுகூரப்படும் கோச்சடையான் திரைப்படம் தற்போது புதிய தலைமுறைக்காக மறுபிறவி எடுக்க இருப்பதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும், படத்தின் Re-Imagined பதிப்பின் டீஸர் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில். கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோச்சடையான. அனிமேஷன் திரைப்படமான இப்படத்தில் ரஜினிகாந்த் கோச்சடையனாகவும் இவருடன் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

கோச்சடையான் : சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள 'வித் லவ்' தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை குவித்து வரும் நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் கோச்சடையான் திரைப்படம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் காலத்தை விட முன்னேறிய படம் கோச்சடையான். இப்போது ErosGenAI-யின் மேம்பட்ட மாடல்களின் மூலம் AI தலைமையிலான மறுசீரமைப்பு, செயல்திறன் மேம்பாடு மற்றும் சினிமா விவரங்களில் புதிய உயிர் ஊட்டப்பட்டு, புதிய கோச்சடையானை ரசிகர்களிடம் கொண்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
டீசர் வெளியானது: Eros International ஆதரவுடன் உருவான இந்தப் படம், இந்தியாவின் முதல் புகைப்பட யதார்த்த (photo-realistic) அனிமேஷன் முயற்சிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றது அந்த நேரத்தில் பெரும் பேசுபொருளானது. இப்போது ErosGenAI தொழில்நுட்பத்தின் உதவியுடன், காட்சித்தரம், கதாபாத்திர முகபாவனைகள், செயல்திறன் விவரங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கேற்ப மறுகற்பனை செய்யப்பட்ட வடிவில் Re-Imagined பதிப்பின் டீஸர் வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் கோச்சடையான் டீசர், ரசிகர்களிடையே மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பழைய மரபை மதித்து, புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாகும் இந்த "புதிய கோச்சடையான்" ரசிகர்களை எவ்வாறு கவரப் போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











