இனி ரஜினி வழி தனி வழி அல்ல: சாதாரண வழி தான்
Recommended Video

சென்னை: இனி சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழி தனி வழி அல்ல.
என் வழி தனி வழி என்று ரஜினிகாந்த் பேசிய வசனம் மிகவும் பிரபலம். சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் யாரையும் காப்பியடிக்காமல் வாழ்பவர்.
அந்த காரணத்தால் தான் அவர் வழி தனி வழியாகவே இத்தனை நாட்களாக இருந்தது.

ரஜினி
அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சி துவங்கவில்லை. இருப்பினும் அவர் தனது தனி வழியில் நிதானமாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர்
அரசியல் கட்சி துவங்கும் முன்பே தன் பெயரில் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருபவர்கள் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதை ரஜினி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அரசியல் கட்சி துவங்கியபோதிலும் அவரின் நண்பர் கமல் டிவி சேனல் எதுவும் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண வழி
சினிமாவில் யாரையும் காப்பியடிக்காமல் இருக்கும் ரஜினி அரசியலில் தனது முன்னோடிகளின் வழியில் செல்லத் தயாராகிவிட்டார். பிற அரசியல்வாதிகளை போன்று தான் அவரும் இருப்பார் என்று டிவி சேனல் விஷயத்தில் நிரூபித்துள்ளார். டிவி சேனல் துவங்குவது தவறு இல்லை. ஆனால் ரஜினி ஏதாவது வித்தியாசமான அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கும்போது இப்படி சாதாரணமான காரியம் செய்வது அதிருப்தி அளிக்கிறது.

வதந்தி
ரஜினிகாந்த் டிவி சேனல் துவங்குகிறார் என்ற செய்தி வெளியானதும் அதெல்லாம் இல்லை எங்கள் தலைவர் அப்படி எல்லாம் செய்யவில்லை. இது அவரை பிடிக்காத யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று அவரது ஆதரவாளர்கள் பொங்கினார்கள். சரி, அந்த வதந்தி வதந்தியாகவே போகட்டும் என்று பார்த்தால் டிவி சேனல் துவங்குகிறேன் என்று அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க செல்லும் முன்பு அறிவித்துவிட்டு சென்றுள்ளார் ரஜினி.


Click it and Unblock the Notifications











