ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு.. ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து.. தலைவருக்கு செம நக்கல்.. ட்விஸ்ட் இருக்கோ?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை இயக்குவது யார் என்பது விரைவில் தெரியவரும். இந்நிலையில் ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து ரசிகர்களிடம் பயங்கர சென்சேஷனல் ஆகியிருக்கிறது. தலைவருக்கு செம நக்கல் ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

ரஜினிகாந்த்துக்கு 2025ஆம் ஆண்டு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் கூலி படத்தில் நடித்து ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் கமலுக்கு தரமான படத்தை கொடுத்த இயக்குநர்; ரஜினிக்கு சொதப்பி வைத்துவிட்டார். அரத பழசான கதையை; திரைக்கதை உள்ளிட்டவைகளில் எந்த புதுமையும் இல்லாமல் கொடுத்து சூடுபட்டுக்கொண்டார். இதனால் சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அப்செட்டாகிவிட்டார்கள்.

Rajinikanth Sensational New Year Post Trends as Jailer 2 Nears Completion
Photo Credit:

ஜெயிலர் 2 ரஜினி: இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். இதன் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. முதல் பாகத்தின் வெற்றியை போன்றே இதிலும் பெற வேண்டும் என்பதும்; கூலி கொடுத்த அடிக்கு ஜெயிலர் 2வை வைத்து மருந்திட்டுக்கொள்ள வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறாராம் ரஜினி. நெல்சனும் தனது பொறுப்பை உணர்ந்து ரொம்பவே உஷாராக படத்தை இயக்கிவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

தலைவர் 173: 75 வயதாகும் ரஜினிக்கு ஓய்வு என்பதே என்னவென்றே தெரியாத மாதிரிதான் இருக்கிறது. ஜெயிலர் 2வை முடித்த கையோடு கமல்ஹாசனின் தயாரிப்பில் தனது 173ஆவது படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இதனை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக இன்னொரு இயக்குநரை தேடும் பணியில் ராஜ்கமல் நிறுவனம் தீவிரம் காட்டிவருகிறது. அநேகமாக இளம் இயக்குநர் யாராவது ஒருவரைத்தான் ஃபிக்ஸ் செய்வார்கள் என்று தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து: இந்த ஆண்டு ஜெயிலர் 2 வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் புத்தாண்டு வாழ்த்து ரசிகர்களிடையே சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முத்து படத்தில் மீனாவிடம் அவர், 'யாருக்கு தெரியும். நான் எப்போதும் போற ரூட்டை பற்றி கவலைப்படுவது கிடையாது. ஆண்டவன் மேலே பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ; சிவானு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதன்' என பேசும் சீனை வைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

குவியும் கமெண்ட்ஸ்: இதனை பார்த்த பலருக்கும் ஒரு நிமிஷம் தலையே சுத்திவிட்டது. ரஜினியா இப்படி வாழ்த்து சொல்லியிருப்பது; தலைவருக்கு செம நக்கல் ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த வருடம் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது. இப்போது முத்து பட சீனை வைத்திருப்பதால், இந்த வருடம் முத்து படம் ரீ ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் இதை பார்த்த இன்னும் சிலரோ, 'வாட்ஸ் அப்பில் வைக்க வேண்டிய ஸ்டேட்டஸை ட்விட்டரில் வைத்துவிட்டார்' எனவும் கமெண்ட்ஸ் செய்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கமோ, 'எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு போய்ட்டு இருக்கேன். என்னை எதிலும் இழுக்காதீர்கள்' எனவும் சொல்வதாக அவரது ஃபேன்ஸ் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, தனது வீட்டு முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கும் வீட்டை விட்டு வெளியே வந்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர்கள் கொடுத்த அன்பளிப்புகளையும் பெற்றுக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X