என்ன ஆட்டம் ஆடுன.. கூலி வேலை பார்த்த ரஜினி.. அவமானப்படுத்திய நண்பர்.. தலைவர் கதறி அழுத நாள்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தான் கூலியாக வேலை பார்த்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டது ரசிகர்களிடம் கவனத்தை பெற்றிருக்கிறது.
நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் பிறகு சினிமாவில் நடிக்க வந்து இப்போது உச்ச இடத்தில் இருக்கிறார். 74 வயதாகும் அவர் வாழ்க்கையின் அனைத்து படிநிலைகளையும் பார்த்துவிட்டார். அதன் காரணமாகத்தான் எவ்வளவு உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தான் வந்த பாதையையும், பட்ட அவமானங்களையும் மறக்காமல் இருக்கிறார். அவரது அந்த குணமும் இந்த உயரத்துக்கு காரணமாக கொள்ளலாம்.
ஈகோ பார்க்காத ரஜினி: பொதுவாக ஒருவருக்கு உள்ளங்கை அளவு புகழ் வந்தாலே அவர்களது கால்கள் தரையில் நிற்காது, அவரது வார்த்தைகள் மற்றவர்களை மதிக்காது; பார்வைகள் மற்றவர்களை சமமாக பார்க்காது. ரஜினியோ இதில் விதிவிலக்கு. யாராக இருந்தாலும் அவர் உயர்ந்தவரோ, இல்லை தன்னுடைய புகழுக்கு குறைவானவரோ இருந்தாலும் எந்தவித ஈகோவும் பார்க்காமல் மிக் எளிதாக பழக்ககூடியவர், பேசக்கூடியவர்.

கூலி ரஜினி: இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதன்முறையாக லோகியுடன் கூட்டணி வைத்திருப்பதால் இப்படம் தரமான சம்பவமாக செய்யும் என்ற நம்பிககி திரைத்துறையில் பிறந்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் சுமாரான வரவேற்பை பெற்றாலும்; மேக்கிங்கில் நிச்சயம் ஏதாவது வித்தியாசம் காட்டி படத்தை ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இசை வெளியீட்டு விழா: பட ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை பேசிய ரஜினி, தான் கூலியாக வேலை பார்த்தபோது சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
ரஜினியின் பேச்சு: அவர் பேசுகையில், "நான் கூலியாக வேலை பார்த்திருக்கிறேன். அப்போது நிறைய திட்டுக்கள் வாங்கியிருக்கிறேன். ஒருநாள் டெம்போவில் லக்கேஜை ஏற்ற சொல்லி 2 ரூபாய் கொடுத்தார்.இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என திரும்பி பார்த்தேன். அவர் எனது கல்லூரி நண்பர். அவரை கல்லூரியில் அதிகமாகவே கிண்டல் செய்திருக்கிறேன். நான் கூலி வேலை செய்வதை பார்த்த அவரோ என்னிடம், 'என்ன ஆட்டம் போட்டடா' என சொல்லிவிட்டு சென்றார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் முதன்முறையாக அப்போதுதான் உடைந்து அழுதேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











