ராஜாதிராஜா படம் அப்போ ரஜினி சார் என் வீட்டுக்கு வந்தார்... நடிகர் விஜய் பகிர்ந்த சுவாரசிய தகவல்!
சென்னை: நடிகர் விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது
தமிழில் தொடர்ந்து தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் ராஜாதி ராஜா படத்தின் போது ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டுக்கு வந்த பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜய்யின் மார்க்கெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகராக உள்ளார் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப் பெரிய பிசினஸ் செய்து வருகிறது குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு தமிழில் இருப்பது போலவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர் இப்பொழுது மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் மார்க்கெட் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது.

பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வந்த பீஸ்ட் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. இதுவரை விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியுள்ள பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை வழக்கமான வசூலையும் எட்டவில்லை மாறாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது இருப்பினும் வசூல் ரீதியாக எந்த படம் வெற்றி படம் என ஒரு டாக் உள்ளது

ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா
இந்த நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படப்பாளி இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை தமிழில் மட்டும் கலக்கிக் கொண்டிருந்த விஜய் முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படத்தில் நடிக்க இருப்பதால் தெலுங்கு திரைப்படத் துறையிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

ராஜாதிராஜா படத்தின் போது
சிறுவயது முதலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான விஜய் நேர்காணல் ஒன்றில் ரஜினி குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ராஜாதிராஜா படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டுக்கு வந்தாராம். அப்போது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். நாளைய தீர்ப்பு பட பூஜையின்போது ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை விஜய் பிரேம் போட்டு தன்னுடைய அறையில் மாட்டி உள்ளதாகவும் பழமையான நினைவுகளை விஜய் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











