மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி போகவில்லை: ஐஸ்வர்யா தனுஷ் மட்டும் பங்கேற்பு

By Siva

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் விழாவில் அவரது மனைவி லதா கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் விழாவுக்கு செல்லவில்லை. மாறாக அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்றுள்ளார்.

Rajinikanth skips Modi swearing-in ceremony but his daughter Aishwarya attends

மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டுள்ளார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி லதா கலந்து கொள்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் விழாவில் கலந்து கொண்டார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X