Rajini - சீஃப் மினிஸ்டர்னா அவ்ளோ சீப்பா.. நினைச்சவன் எல்லாம் சிஎம் ஆகலாம்.. ட்ரெண்டாகும் ரஜினியின் பேச்சு

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதுதான் கடந்த சில நாட்களாக டாக் ஆஃப் தி இன்ட்டெர்நெட்.

விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்தததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டது.

 Rajinikanth Spoken about CM in Baba Movie That Video Goes Trending on Social Media


அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.

விமர்சனம்: அரசியலுக்கு விஜய் வந்துவிட்டாலும் அவரை சுற்றி விமர்சனங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. உதாரணமாக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கும் என விஜய் அறிவித்ததைத் தொடர்ந்த்; 2024ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்துவிட்டு இரண்டு வருடங்கள் அந்தக் கட்சிக்கு லீவு விட்டே ஒரே கட்சி தலைவர் விஜய்தான் என்று விமர்சிக்கிறார்கள் ஒருதரப்பினர். அதேபோல் கட்சி பெயரை எழுத்துப்பிழை இல்லாமல்கூட வைக்க முடியவில்லையே என்று விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து கட்சி பெயரில் 'க்’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டது.

ட்ரெண்டாகும் ரஜினியின் பேச்சு: இந்நிலையில் பாபா படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனம் ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், “சீஃப் மினிஸ்டர் என்றால் அவ்வளவு சீப்பா போயிடுச்சுல.யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகிடலாமா. அது எப்பேற்பட்ட பதவி. எவ்வளவு பெரிய பொறுப்பு. ஒரு வேலைக்காரனை வைத்துக்கொண்டு 4 பேர் இருக்கும் குடும்பத்தை சமாளிக்கவே திண்டாடுறீங்க. நாடுங்கிறது எவ்வளவு பெரிய வீடு. எத்தனை ஆட்கள், பிரச்னைகள். அதையெல்லாம் தீர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு அறிவு, அனுபவம், தியாகம், நேர்மை வேண்டும். ஒரு தகப்பன் நல்லா இருந்தாதான் குடும்பம் நல்லா இருக்கும். அதுமாதிரி ஒரு சிஎம் நல்லா இருந்தாதான் இந்த நாடு நல்லாருக்கும்” என பேசுகிறார்.

இந்த வீடியோவை இப்போது நெட்டிசன்களில் ஒருதரப்பினர் அதிகம் பகிர்ந்துவருகின்றனர். மேலும் இந்த வீடியோவை விஜய்யுடன் இணைத்தும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வர வேண்டியதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த முடிவிலிருந்து அவர் ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X