அருணாச்சலம் 27.. படையப்பா 25.. இண்டஸ்ட்ரி ஹிட்டடித்த ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் அருணாச்சலம். இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதே போல படையப்பா படமும் வெளியாகி 25 ஆண்டுகள் ஆவதை ரஜினி ரசிகர்கள் இணையத்தின் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.
Brewster's Millions என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் அருணாச்சலம் படம். சுந்தர் சி இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தியேட்டரில் வசூலை அள்ளியது. இந்த படத்தில், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, மனோரமா, விணுசக்கரவர்த்தி, ரகுவரன், பொன்னம்பலம், விசு, செந்தில், ஜெய்சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

அருணாச்சலம்: இதில் அதான்டா இதான்டா, மாத்தாடு மாத்தாடு மல்லிகை, சிங்கம் ஒன்று என அனைத்துப்பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. திரையுலகில் தன்னுடன் பயணித்த 8 பேரின் வாழ்வியல் உதவிக்காக ரஜினி இப்படத்தில் நடிக்கவும், சொந்தமாக தயாரிக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கிரேஸி மோகன் வசனத்துடன் இப்படம் உருவானது இப்படத்தில் ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான் என்ற வசனம் இன்று வரை டாப் வசனமாகவே உள்ளது. இத்திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் இணையத்தில் போஸ்டரை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
படையப்பா 25: அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மற்றொரு வெற்றிப்படமான படையப்பா திரைப்படம் வெளியாகி இன்றொரு 25 ஆண்டை நிறைவு செய்துள்ளது. இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கி இருந்தார். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி, ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார்.
அட்டகாசமான நடிப்பு: இப்படத்தில் சிவாஜி கணேசன் ரஜினியின் தந்தையாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வரும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களின் கண்களில் தண்ணீரை வரவைத்துவிடுவார். அதைவிட, நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருண்ஷனின் நடிப்பு இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அவரின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மறக்க முடியாத படமாக உள்ளது.
ரூ.61 கோடி வசூல்: இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று ஏ.ஆர். ரஹ்மான் இசை. ரஜினிக்கான ஹீரோ பிஜிஎம், வில்லி ரம்யா கிருஷ்ணனுக்கான பிஜிஎம் என பின்னணி இசையில் கலக்கி இருப்பார். இன்றுடன் படையப்பா திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படையப்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 61 கோடியை வசலித்து சாதனை படைத்தது.


Click it and Unblock the Notifications











