குறைந்த விலைக்கு விற்பனையான அண்ணாத்த… அதிர்ச்சியில் ரசிகர்கள் !

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் குறைந்த விலைக்கு விற்பனையாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இப்படம் தீபாவளியன்று நவம்பர் 1ந் தேதி வெளியாக உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிராமத்து கதையில் ரஜினி நடிப்பதால் ரசிகர் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர்.

படத்தின் வெளியிட்டுத் தேதி நெருங்கி வருவதால் இப்படத்தை பற்றிய சில அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணாத்த ரஜினிகாந்தின் 168வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மீனா, பிரகாஷ்ராஜ், சூரி,சதீஷ் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணி

குடும்பப் பின்னணி

குடும்ப பின்னணிக் கொண்ட இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும். ஆனால், ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, குஷ்பு அண்ணாத்த படத்தில் ரஜினியின் சகோதரிகளாக நடிக்கிறார்.

தீபாவளிக்கு இப்படம் வெளியாகி உள்ளதால், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

பாடல்கள் ஹிட்

பாடல்கள் ஹிட்

அக்டோபர் 4ந் தேதி அண்ணாத்த திரைப்படத்தில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிலிருந்தது. இந்த பாடலை மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடியிருந்தார். இதையடுத்து, ரஜினி, நயன்தாரா இடையேயான காதலை சொல்லும் பாடலாக சார காற்று பாடல் வெளியானது. இந்த பாடலை சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.

டீசர்

டீசர்

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. டீசர் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

குறைந்த விலைக்கு

குறைந்த விலைக்கு

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் ரூ.14 கோடி விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் முந்திய திரைப்படமான பேட்ட, காலா, தர்பார் இதை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில், அண்ணாத்த திரைப்படம் குறைந்த விலைக்கு விற்பனையாகி உள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X