செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்.. தள்ளிவிட்ட பவுன்சர்.. சட்டென மாறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முகம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. படம் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்திற்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ரசிகர் ஒருவரை பவுன்சர்கள் தள்ளிவிட்டனர். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணில் பட்டதுமே, அந்த ரசிகரை அழைத்து தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படமான கூலி படம் சரியாக போகவில்லை. படம் விமர்சன ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. இப்படி இருக்கையில் ரசிகர்கள் பலரும் ஜெயிலர் 2 படத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படி இருக்கையில் ஜெயிலர் 2 படம் தமிழ் சினிமாவில் ரூபாய் 1000 கோடி வசூலை ஈட்டிய முதல் படம் என்ற சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் சில பேட்ச் - ஒர்க் மட்டும் தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்திற்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ரசிகர் ஒருவரை பவுன்சர்கள் தள்ளிவிட்டனர். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணில் பட்டதுமே, அந்த ரசிகரை அழைத்து தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பாராட்டி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு என்று கேள்விகளை பலரும் எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications