வேட்டையனில் சம்பளமே இல்லாமல் நடிக்க தயாராக இருந்த ஃபகத் பாசில்.. ரஜினி சொன்ன சீக்ரெட்
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்கழுவினர் கலந்துகொண்டனர். மேடையில் ஒவ்வொருவர் பற்றியும் ரஜினி; ஃபகத் பாசில் குறித்து சொல்லியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜெய்பீம் இயக்குநருடன் ரஜினி முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இது ஞானவேல் ஸ்டைலில் இருக்குமா இல்லை ரஜினி ஸ்டைலில் இருக்குமா என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டும் கலந்த கலவை: சூழல் இப்படி இருக்க வேட்டையன் படத்தின் டைட்டில் இண்ட்ரோ வீடியோ வெளியானது. அதில் குறி வெச்சா இரை விழணும் என்ற பஞ்ச் இடம்பெற்றிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைலில் உருவாகியிருக்குமோ என்று சந்தேகம் கிளப்பினர். ஆனால் அப்படி இல்லை ரஜினிக்காக சில போர்ஷன்கள் கமர்ஷியலாக இருக்கின்றன. அதேசமயம் ஞானவேல் தனது பாணியையும் இதில் விடவில்லை. உண்மையாக நடந்த போலி என்கவுன்ட்டரை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ரஜினிகாந்த் தனது பகுதிக்கான டப்பிங்கை அண்மையில் முடித்தார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டப்பிங்கின்போது ஒரு காட்சியை பார்த்துவிட்டு இயக்குநரை ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
படத்தின் டீசர்: இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். விழாவில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. அந்த டீசர் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்களள்.
ரஜினியின் பேச்சு: இந்நிலையில் ஃபகத் பாசில் குறித்து பேசிய ரஜினிகாந்த், “வேட்டையனில் ஃபகத் கதாபாத்திரம் அருமையானது. அந்தக் கதாபாத்திரத்துக்கு அவர்தான் வேண்டுமென்று இயக்குநர் பிடிவாதமாக இருந்தார். ஃபகத்துக்கு இந்தக் கேரக்டர் பிடித்திருப்பதாகவும்; சம்பளமே இல்லாமல்கூட நடிக்க தயார் என்று ஃபகத் சொன்னதாக இயக்குநர் என்னிடம் சொன்னார். ஆனால் இரண்டு மாதங்கள் டைம் கேட்டார். எனக்காக சன் பிக்சர்ஸ், லோகேஷ் காத்துக்கொண்டிருந்தார்கள். உடனே நான் லோகேஷிடம் நாம கொஞ்சம் ஷூட்டிங்கை தள்ளி வைத்துக்கொள்வோம் என்று சொன்னேன். உடனே அவர் ஓகே சொல்லிவிட்டார். பிறகுதான் தெரிந்தது அதுவரை அவர் கதையை ஒழுங்காக செய்யவில்லை என்று” என்றார்.


Click it and Unblock the Notifications