சூர்யாவுக்கு நன்றி.. முற்றிப்போன பஞ்சாயத்து..முடித்து வைத்த ரஜினிகாந்த்.. ரசிகர்கள் ஹேப்பி

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் அன்றைய தினம் சூர்யா நடித்திருக்கும் கங்குவாவும் ரிலீஸாவதாக இருந்தது.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

rajinikanth kanguva vettaiyan

ஷூட்டிங் ஓவர்: வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ரஜினிகாந்த்தும் முழு மூச்சுடன் அதில் நடித்துவந்தார். ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

டப்பிங் ஸ்டார்ட்: படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. ஃபகத் பாசில் உள்ளிட்டோர் தங்களுக்கான டப்பிங்கை பேசி முடித்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனை பார்க்கையில் இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகவும் உருவாகியிருப்பது உறுதியானது.

வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரஜினிகாந்த்தும் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை சமீபத்தில்தான் பேசி முடித்தார்.

ரஜினி சொன்ன நன்றி: இதற்கிடையே அக்டோபர் 10ஆம் தேதி சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் நேற்று நடந்த மெய்யழகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, 'ரஜினி சாருக்கு மரியாதை கொடுத்து அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸிலிருந்து கங்குவா தள்ளி வைக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். இந்நிலையில் சூர்யாவின் பேச்சு குறித்து ரஜினியிடம் கேட்டதற்கு, "சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி. அவர் நடித்திருக்கும் கங்குவா படமும் நன்றாக போக வேண்டும்" என்றார்.

ரஜினியின் இந்தப் பேச்சை கேட்ட இருதரப்பு ரசிகர்களும் வேட்டையன் Vs கங்குவா என்ற நிலை இருந்தபோது ரஜினி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கினர். இப்போதோ சூர்யாவின் பேச்சும், ரஜினியின் பேச்சும் அந்தப் பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X