Coolie.. கூலி ரிலீஸ்.. ஆகஸ்ட் 14ல் ரஜினி எங்கே என்ன செய்யப்போகிறார் தெரியுமா?.. ஆஹா வேற லெவலுல இருக்காரு

சென்னை: ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் ரிலீஸாக இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். லோகேஷும் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக கலந்துகொண்டிருக்கிறார். நாளை நடக்கவிருக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு மீதும் பலரது கவனம் திரும்பியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. இதில் அவருடன் சத்யராஜ், ஆமிர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். முதன்முறையாக ரஜினியும், லோகியும் இணைந்திருக்கிறார்கள். கமலுக்கு எப்படி லோகி தரமான சம்பவத்தை செய்தாரோ அதே சம்பவத்தை இதிலும் ரிப்பீட் செய்வார் என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் நம்பிக்கயாக இருக்கிறது.

ரிலீஸ் நெருங்கிவிட்டது: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்போதுவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் அவர் பேச்சும் பல விஷயங்கள் அனைவரையும் ரசிக்க செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajinikanth to join Jailer 2 shoot on Coolie release day
Photo Credit:

ரஜினி சொன்னது: உதாரணமாக, ரஜினியை சந்தித்தபோது, 'தான் ஒரு கமல்ஹாசனி ரசிகர்' என்று சொன்னதாகவும்; அதற்கு ரஜினியோ இசை வெளியீட்டு விழாவில் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என கூறியதாகவும் தெரிவித்திருந்தார். அதனைப் பார்த்த நெட்டிசன்களோ, அப்போ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்தின் பேச்சில் கண்டிப்பாக ஃபன்கள் அதிகமாகவே இருக்கும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். நாளை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. ட்ரெய்லரும் ரிலீஸாகவிருக்கிறது.

மூன்று சிங்கிள்கள்: இதுவரை மூன்று சிங்கிள்கள் வெளியாகி, மோனிகா பாடலும், பவர் ஹவுஸ் பாடலும் ஹிட்டாகியிருக்கின்றன. கண்டிப்பாக படத்தின் ரீ ரெக்கார்டிங்கில் அனிருத் பட்டையை கிளப்பியிருப்பார் என்று தெரிகிறது. மேலும் நாளை நடக்கவிருக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தின் ஃபெர்பார்மென்ஸும் இருக்கும் என்பதால் நாளை மேடை தீ பிடிக்கும் என்பது அனி ரசிகர்களின் உச்சக்கட்ட நம்பிக்கை.

ரஜினியின் பிளான்: இந்நிலையில் கூலி படம் ரிலீஸாகும் நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினிகாந்த் எங்கு இருப்பார் என்ன செய்வார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அன்றைய தினம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ இந்த வயதிலும், தன்னுடைய ஒரு படம் ரிலீஸாகும் நாளில் இன்னொரு படத்தில் வேலை செய்கிறாரே ரஜினி என ஆச்சரியப்படுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X