விஜய் முதலமைச்சராக ரஜினி தடை போட்டாரா?.. பிரபலம் அதிரடி.. சரமாரி கேள்வி எழுப்பிருக்காரு
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்னமும் ஜொலித்துக்கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ஆனால் இடையில் அவருக்கு சில படங்கள் தோல்வியடைய; அந்த இடத்தை விஜய் ரசிகர்கள் உரிமை கொண்டாடினார்கள். அப்போதிருந்து அவர்கள் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் மோதல் வெடித்தது. மேலும் ரஜினி காக்கா, கழுகு கதை சொல்ல; அதற்கு விஜய்யும் பதில் தர; இரண்டு பேருக்குமான மோதல் வெளியேயும் வர ஆரம்பித்தது. தற்போது விஜய்யோ தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றும்விட்டார்.
ரஜினிக்கு அண்ணாத்த, தர்பார் என வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்தன. அந்த சமயத்தில் வெளியான விஜய்யின் படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும்; வசூலில் ரஜினி படங்களை முந்திவிட்டதாக தொடர்ச்சியாக தகவல்கள் பரவின. இதன் காரணமாக இனிமேல் ரஜினி சூப்பர் ஸ்டார் நாற்காலியிலிருந்து இறங்கிவிட வேண்டும்; அந்த இடத்தை விஜய்க்கு கொடுக்க வேண்டும் என்றும் தளபதி ரசிகர்கள் கூற ஆரம்பிக்க; இந்த இடம் எங்கள் தலைவருக்கானது என ரஜினி ரசிகர்களும் சண்டைக்கு நின்றார்கள்.

பற்றி எரிந்த பஞ்சாயத்து: ரசிகர்களுக்குள் மட்டும்தான் மோதல் என பலர் நினைத்திருந்த நேரத்தில்; ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை சொன்னார். அது மறைமுகமாக விஜய்யை அட்டாக் செய்வது போன்ற ஒரு தொனியும் அதில் இருந்தது. உடனே விஜய்யோ லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதற்கு பதிலடியும் கொடுத்தார். இதனால் இன்பங்கள் தர வேண்டிய இசை வெளியீட்டு விழாக்களில் சஞ்சலங்களும், சண்டையில் எழும் கத்தல்களும் அதிகம் கேட்டன.
அரசியலுக்கு வந்தும்: அப்படியே காலங்கள் நகர; காட்சிகள் மாற விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு தலைவராகவும் மாறினார். அந்த சமயத்தில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா, 'ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தபோது அவரை திமுக மிரட்டியது' என கூற; மறுபடியும் ரஜினி vs விஜய் என்ற பிரச்னை உருவாக தொடங்கியது. இந்த விஷயத்தை பக்குவமாக கையாண்ட ரஜினி, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என எச்சரித்திருந்தார். உடனடியாக ஆதவ் மன்னிப்பு கேட்க; விஜய் இறுதிவரை இதில் வாயே திறக்கவில்லை.
முதலமைச்சர் சி.ஜோசப்: விஜய் இப்போது முதலமைச்சராகவும் பதவியேற்றுவிட்டார். தான் தீவிரமாக எதிர்த்த மு.க. ஸ்டாலினையே நேரில் சென்று சந்தித்துவிட்டார். ஆனால் ரஜினியை இன்றுவரை சென்று சந்திக்கவில்லை. அதேசமயம் ரஜினியோ, மு.க.ஸ்டாலினின் தோல்வியை கேள்விப்பட்டதும் ஓடோடி சென்று ஆறுதல் தெரிவித்தார். ரஜினியை விஜய் சந்திக்காதது கொஞ்சம் கொஞ்சமாக விவாதத்தை கிளப்பிவருகிறது. மேலும், விஜய்யின் அரசியல் பிரவேசத்தில் ரஜினி மீண்டும் முக்கியத்துவமும் பெற ஆரம்பித்திருக்கிறார்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்தில் எங்கேயாவது ரஜினியை விமர்சிப்பதாகவோ, கேவலப்படுத்துவதாகவோ இருக்கிறது. ஆனால் அந்தக் கருத்துக்கு பொங்கி எழுந்து, 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என கூறினார். ஆனால் இப்போதோ, 'விஜய் முதலமைச்சராக பதவியேற்க ரஜினி முட்டுக்கட்டை போடுகிறார்' என செய்திகள் வருகின்றன. இதற்கு நீங்கள், 'அதெல்லாம் பொய். இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை' என்று விளக்கம் அளித்திருக்க வேண்டியதுதானே. எது உங்களை தடுக்கிறது. மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் ஆளாக தன்னை எல்லா நாட்களும் வைத்திருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
