ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

By Chakra

சென்னை: சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து ரத்த சுத்திகரிப்புக்காக அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.

இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபாய கட்டத்தை தாண்டினார் ரஜினி-டாக்டர்:

இந் நிலையில் ரஜினி அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக‌ அவருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் கூறினார்.

இன்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் நிருபர்களிடம் பேசுகையில், ரஜினி நலமுடன் உள்ளார். 48 மணிநேர கண்காணிப்பிற்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அபாய கட்டத்தை ரஜினி தாண்டிவிட்டார். எனவே யாரும் பதட்டப்பட தேவையில்லை, அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X