விஜய் ரசிகர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள்.. மலேசியாவில் யார் மாஸ் தெரியுமா?.. அட இது லிஸ்ட்லையே இல்லையே ப்பா!
சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்கு செலிபிரிட்டிகளும், அதை காண்பதற்கு ரசிகர்களும் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள். மலேசியாவுக்கு விஜய் சென்று இறங்கியது; தங்கும் இடத்துக்கு சென்றது என பல வீடியோக்களை அவரது ஃபேன்ஸ் பகிர்ந்து விஜய்யின் மாஸ் இதுதான் என சோஷியல் மீடியாவில் கூறிவரும் சூழலில்; ரஜினியின் ரசிகர்கள் அவர்களுக்கு எதிராக களத்தில் குதித்திருக்கிறார்கள்.
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க; பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். மமிதா பைஜு, பிரியாமணி என ஏராளமான நட்சத்திரங்கள் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து; இது பகவந்த் கேசரியின் ரீமேக் என பலமான பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என்று படத்தின் டீசர், ட்ரெய்லர் வந்தாலோ அல்லது படம் வந்தாலோதான் தெரியும்.

மலேசியாவில் இசை வெளியீட்டு விழா: படத்தின் ரிலீஸ் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இசை வெளியீட்டு விழா மீது அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். இம்முறை தமிழ்நாட்டில் நடத்தாமல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடத்துகிறார்கள். இங்கு விஜய் நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார். எனவே இங்கே விழா நடத்தினால் ஆளும் தரப்பு குடைச்சல் கொடுக்கும் என பலர் கருதியதால் இந்த ஏற்பாட்டை படக்குழு செய்ததாக தெரிகிறது.
பாடகர்கள், பாடகிகள்: தளபதி திருவிழா என்று இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் திப்பு, விஜய் யேசுதாஸ்,ஹரி சரண், ஹரிஷ் ராகவேந்திரா, க்ரிஷ், எஸ்.பி.பி சரண், அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, ஆண்ட்ரியா, ஸ்வேதா மேனன் என பல பின்னனி பாடகர்களும், பாடகிகளும் கலந்துகொண்டு; பழைய விஜய் பட பாடல்களை மேடைகளில் பாடி ரசிகர்களை வைப் செய்ய காத்திருக்கிறார்கள்.
குடும்பத்துடன் விஜய்: இவர்கள் தவிர்த்து நெல்சன் திலீப்குமார், பிரபுதேவா, லோகேஷ் கனகராஜ், அட்லீ போன்ற இயக்குநர்களும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார்கள். விஜய்யும் தனது தாய், தந்தை, உறவினர்களுடன் நேற்று மலேசியாவுக்கு சென்றடைந்தார். அவருக்கு மலேசிய சிறுவர்கள் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்பு கொடுத்தார்கள். அதுமட்டுமின்றி மலேசியாவில் விஜய் இறங்கியதிலிருந்து அவர் தொடர்பான வீடியோக்களை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகிறார்கள்.
களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்: மேலும் அந்த வீடியோக்களுடன், மலேசியாவில் விஜய்க்கு இருக்கும் மாஸை பாருங்கள் என்றும் பெருமிதத்துடன் கூறிவருகிறார்கள். இப்படி சோஷியல் மீடியா எங்கும் விஜய் மயமாக இருக்கும் நிலையில்; ரஜினி கபாலி பட ஷூட்டிங்கிற்காக மலேசியாவுக்கு சென்ற வீடியோக்களை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பகிர்ந்து; இந்த மாஸையெல்லாம் நாங்கள் உங்களுக்கு முன்னரே பார்த்துவிட்டோம் என கூற; விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே காக்கா, கழுகு கதையில் அவர்களுக்கிடையே மோதல் வந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











