தன்னை வைத்து சூப்பர் ஹிட்டுகளை கொடுத்த இயக்குநரிடம் கதை கேட்டிருக்கும் ரஜினி.. அடுத்து இவருடன்தானா?
சென்னை: தன்னை வைத்து பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள பிரபல இயக்குநரிடம் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
சமீபத்தில் நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த படம் வெளியானது.

சில இயக்குநர்களின் பெயர்கள்
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது. சில இயக்குநர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.

இயக்குநர்களிடம் கதை கேட்ட ரஜினி
அதன்படி இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, ஏஆர் முருகதாஸ், நெல்சன் திலீப்குமார் மற்றும் பாண்டிராஜ் ஆகியோரில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சில இயக்குநர்களிடம் கதை கேட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஒன் லைன் மட்டுமே..
அண்மையில் ஐந்து இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார் ரஜினிகாந்த். ஆனால் அவர்கள் எல்லோருமே ஒன் லைன் மட்டுமே கூறியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு ஓகே என்றால் முழு ஸ்க்ரிப்டையும் தயார் செய்வதாக கூறியுள்ளார். இதனால் அப்செட்டான ரஜினிகாந்த், தனது சினிமா நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.

கேஎஸ் ரவிக்குமார் தான்
அதாவது ஒரு வருடத்தில் பல படங்களை பண்ணியிருக்கேன். அவ்வளவு கதைகள் கிடைத்தன. ஆனால் இன்று அப்படிப்பட்ட கதைகள் இப்போது கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள ரஜினிகாந்த், தன்னை வைத்து பல ஹிட்டுகளை கொடுத்த கேஎஸ் ரவிக்குமார் தான் சரியான இயக்குநர் என எண்ணுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

அடுத்தப்படம் அவருடன்தான்..
பல மாதங்களாகவே ரவிக்குமாரிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி பேசி வந்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ரஜினிக்கு கதையை தயார் செய்தால் அவரது அடுத்தப்படம் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் தான் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











