»   »  ‘தல’க்கு பிறந்த ஆண் குழந்தை: அசத்துங்க அஜீத்… வாழ்த்திய ரஜினி

‘தல’க்கு பிறந்த ஆண் குழந்தை: அசத்துங்க அஜீத்… வாழ்த்திய ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அஜீத் கொண்டாடி வந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அல்டிமேட் ஸ்டார் அஜீத் - ஷாலினி தம்பதிக்கு கடந்த 2ஆம் தேதி காலை 4:30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே அஜீத் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகள் இருக்கிறாள். தற்போது புதிதாக பிறந்த மகனை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குட்டி தல

குட்டி தல

அஜீத் ரசிகர்கள் ‘குட்டி தல' என்று கூறி ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். ஏராளமான பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

கூடவே இருந்த அஜீத்

கூடவே இருந்த அஜீத்

மார்ச் 1ஆம் தேதி இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாலினி அருகிலேயே காத்திருந்தார் அஜீத். மகன் பிறந்த தகவலறிந்து மிகுந்த உற்சாகமான அஜீத், ஷாலினுக்கு மருத்துவர் முன்னிலையிலேயே முத்தம் கொடுத்து அன்பைத் தெரிவித்தார்.

தம்பி பாப்பா

தம்பி பாப்பா

தனது மகள் அனோஷ்காவிற்கு, புதிதாகப் பிறந்த தம்பியைக் காட்டி அஜீத் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், ரஜினியிடமிருந்து அவருக்கு போன் வந்தது.

அசத்துங்க அஜீத்

அசத்துங்க அஜீத்

"பெண் ஒன்று... ஆண் ஒன்று... அசத்துங்க அஜீத்" என சிலாகித்தாராம் ரஜினி. "இன்னொரு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் எனக்கு சந்தோஷமாகத்தான் சார் இருந்திருக்கும்" என அஜீத் கூறினாராம்.

கிடைத்த வரம்

கிடைத்த வரம்

"இல்ல... அப்படி சொல்ல முடியாது. ஆணோட அன்பு பெண்ணோட அன்புன்னு ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. ரெண்டும் உங்களுக்கு வரமா கிடைச்சிருக்கு... பெரிய விஷயம் இது" என ரஜினி கூறினாராம். பின்னர் லதா ரஜினியும் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

என்ன பேர் வைக்கலாம்

என்ன பேர் வைக்கலாம்

இப்போதே பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற ஆலோசனையைத் தொடங்கிவிட்டார் ‘தல'. 16-ம் நாள் பெயர் சூட்டு விழா ஏற்பாடாகி வருகிறது.

English summary
Yesterday (March 2nd) is the special day for the family members of Ajith and Thala fans as Kutty Thala has arrived on the earth. Shalini, the wife of Ajith gave birth to a baby boy yesterday (March 2nd, 2015)
Please Wait while comments are loading...