ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ரஜினி இந்த மாபெரும் மூன்றெழுத்து மந்திரச் சொல்லுக்குஉலகம் மு-ழுக்க வரவேற்பு இருக்கிறது.

இவரது படம் அனைத்துமே வெற்றிப்படம் தான். தமிழகம் ஏன்இந்தியாமுழுக்க இவருக்கு ரசிகர்கள் உண்டு. ரஜினியின்,ரசிகர்கள் கூட்டம் இந்தியாவைத்தாண்டி உலகம் -முழுக்கபரவியிருப்பது ஆச்சர்யம் கலந்த -உண்-மை.

ஜப்பானில் ரஜினி நடித்த -முத்து திரைப்படம் ஒரு வருடம் ஒடியதுஎன்கிற தகவல் பலரை திகைக்க வைத்தது. ஜப்பானில் மட்டும் பலகோடி ரூபாய் வருமானத்தையும் , முத்து படம் குவித்தது.

ரஜினிகாந்த் -நடித்த - முத்து திரைப்படத்தை கந்தசாமி பரதன்ஜப்பானில் திரையிட்டார்.

இந்த படம் டோக்கியோ நகரம் உள்பட பல்வேறு இடங்களில்உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட்டபோது 35வயதுக்குட்பட்ட ஜப்பானிய இளைஞர்களை ரஜினி கவர்ந்தார்.இப்பொழுதும் ஜப்பானிய இளைஞர்கள் பெரும்பாலனவர்கள்இவரது ரசிகர்கள். ஜப்பானில் -முத்து வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, முத்து படத்தை தென் கொ-ரியாவிலும் திரையிடகந்தசாமி பரதன் முடிவு செய்திருக்கிறார்.

தென் கொரியாவிலும் ரஜினி படம் ரசிகர்களிடம் வரவேற்பைபெறும் என்று நம்புவதாக கந்தசாமி பரதன் நம்பிக்கைதெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் பல்வேறு -நாடுகளில்இப்படத்தை திரையிட உள்ளனர்.

தமிழகத்தில் வசூலில் சாதனை படைத்த ரஜினியின் படையப்பாவருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜப்பானில்திரையிடப்படுள்ளது. அப்பொழுது ரஜினி படங்களின் சூப்பர்ஹிட் பாடல்கள் அடங்கிய பாடல் கேசட்டை வெளியிடசிங்கப்பூரை சேர்ந்த ஆர்.பி.ஜி குளோபல் மியூசிக் கம்பெனிதிட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, பிரமிட் ஆடியோ கம்பெனியினர் ரஜினியின்ஹிட்பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் வெளியிட்டுள்ளனர்.அது மாதத்திற்கு 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் சி.டிக்கள் வரைவிற்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X