டேய் சவுண்ட ஏத்து தேவா வரான்.. ரஜினிகாந்த்தின் கூலி Chikitu.. பட்டையை கிளப்பும் டி. ராஜேந்தர் நடனம்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிளான Chikitu பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ரிலீஸாகியிருக்கிறது.

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஞானவேல் இயக்கியிருந்த அப்படம் பெரிய ஹிட்டாகும் என்று இருந்த எதிர்பார்ப்பு எல்லாம் தவிடு பொடியானது. இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினி. கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தபோதே அவருடன் ரஜினி பணியாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து அந்த நிறுவனம் தயாரித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படமும் அதே ரிசல்ட்டை பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

லோகேஷுக்கு முக்கியம்: இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படமான மாநகரம் தொடங்கி விக்ரம்வரை ஹிட்டாகவே கொடுத்துவந்தார். ஆனால் அவர் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக ப்ளாஷ்பேக் போர்ஷனை எல்லாம் கலாய்த்து தள்ளினார்கள் ரசிகர்கள். எனவே கூலி திரைப்படத்தின் மூலம் தான் சந்தித்த விமர்சனத்துக்கு சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகி.

Rajinikanth s Coolie First Single Chikitu Is Out Now
Photo Credit:

படத்தின் கதை என்ன?: இது ஒரு பக்கம் இருக்க கூலி படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வியும் ரஜினி ஃபேன்ஸிடம் எழுந்திருக்கிறது. வழக்கம்போல் ஸ்மக்லிங் போன்ற கதைக்களத்தைத்தான் இதிலும் அவர் எடுத்திருப்பாரோ என்றே பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. அதேசமயம் இந்தக் கதையை நான் சில வருடங்களுக்கு முன்னரே எழுதிவிட்டேன்; இது ரஜினிக்காக மட்டும் எழுதப்பட்ட கதையில்லை என்றும் லோகேஷ் விளக்கியிருக்கிறார்.

படத்தின் வியாபாரம்: இப்படி ஏகப்பட்ட ஹைப்புகள் படத்துக்கு இருக்கின்றன. ஓடிடி உரிமத்தை பெரிய தொகை கொடுத்து ஒரு நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இதற்கிடையே ஹிந்தி மொழியில் மட்டும் படத்துக்கு மஜ்தூர் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. சூழல் இப்படி இருக்க படத்தின் முதல் சிங்கிளான Chikitu பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பாடலை டி. ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

வெளியான Chikitu: அதன்படி இன்று பாடலின் வீடியோ வெளியாகியிருக்கிறது. டே நவுர்றா டேய் தேவா வரான் என தொடங்கும் பாடல் வீடியோவின் தொடக்கமே டி.ராஜேந்தர் தனது டிரேட் மார்க் ஸ்டெப்பை போட்டபடி தோன்றுகிறார். அவரைத் தொடர்ந்து அனிருத்தும் நடனம் ஆடியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து படத்தில் ரஜினி ஆடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X