தமிழ் சினிமாவை இனி ரஜினிகாந்த் தான் காப்பாத்தணும்.. லோகேஷ் கனகராஜின் ‘கூலி’யை நம்பும் ரசிகர்கள்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படத்தை போல ஓவர் ஹைப் கொடுத்து புரமோஷன் செய்து 'தக் லைஃப்' படத்தை கமல்ஹாசன் காலி செய்துவிட்டார் என ரசிகர்கள் புலம்பி தவித்து வருகின்றனர். சிம்பு ஏன் இப்படியொரு கதையில் செகண்ட் ஹீரோவாக சென்று சாக வேண்டும் என்றும் செக்கச் சிவந்த வானம் படத்திலும் மணிரத்னம் சிம்புவை போட்டுத் தள்ளினார், மீண்டும் அதே கிளைமேக்ஸ் தான் அவருக்கு என அப்செட் ஆகியுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் குமார், சூர்யா மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகி உள்ளன. இதில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் மட்டுமே ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருந்தது என்றும் அதிக வசூலை ஈட்டியது என்றும் கூறுகின்றனர்.

Rajinikanth s Coolie is the only saviour of Tamil Cinema this year at the Box Office
Photo Credit:

இந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாது என்கிற சூழ்நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் மீதுதான் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

ஓவர் புரமோஷன் உடம்புக்கு ஆகாது: சூர்யாவின் கங்குவா திரைப்படத்துக்கும் இதே போல ஓவர் புரமோஷன் செய்யப்பட்டது. இந்தியன் 2 படத்துக்கும் இதே நிலைமை தான். தற்போது கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்துக்கும் கமல்ஹாசன் சுமார் 2 மாதங்கள் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து படத்தை பற்றிய ஹைப்பை எகிறச் செய்தார். ஆனால், படம் வெளியானதும் தக் லைஃப் படத்தை விட இந்தியன் 2 பரவாயில்லை என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு படத்தின் நிலைமை மோசமடைந்து விட்டது. தக் லைஃப் திரைப்படம் முதல் பாதி ஸ்லோவாக சென்றாலும், ஏகப்பட்ட நல்ல நல்ல காட்சிகள் இருந்தன. ஆனால், இரண்டாம் பாதியில் பழிவாங்கும் படலம் மட்டுமே திரைக்கதையாக சென்ற நிலையில் தான் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போய் விட்டதாக கூறுகின்றனர்.

ரஜினிகாந்த் தான் காப்பாத்தணும்: ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தன. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படம் மீது ரசிகர்கள் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தை கொடுத்தது போல ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth s Coolie is the only saviour of Tamil Cinema this year at the Box Office
Photo Credit:

வெயிட்டான நடிகர்கள்: ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் என வெயிட்டான நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆளுக்கொரு தரமான காட்சிகளை வைத்து புதிய கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை மட்டும் வழக்கம் போல லோகேஷ் கனகராஜ் செய்து விட்டாலே படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும்: தக் லைஃப் திரைப்படம் பெரிய வசூல் வேட்டையை குவிக்குமா என்பது சந்தேகம் தான். இந்த ஆண்டு அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் தான் அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 400 முதல் 500 கோடி ரூபாய் வசூலை தொட்டாலே இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விடும் என்கின்றனர். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்தின் கூலி திரையரங்குகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X