கூலி பட ஆடியோ வெளியீட்டு விழா.. சன் நெக்ஸ்ட்டில் எப்போ வருது தெரியுமா?.. ரசிகர்களே தயாரா
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்தது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 14ல் ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் எல்லாம் களைகட்ட தொடங்கியிருக்கின்றன.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்தார். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து ட்ரோலுக்கும் உள்ளானது. இதன் காரணமாக அவரது நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உணர்த்தியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.
கூலி: தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா,சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. படம் ரிலீஸாக இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தயாராகிவருகிறார்கள்.

கூலி கொண்டாட்டம்: இந்நிலையில் கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில்தான் சென்னை நேரு உள்விளையாட்டு ஆரங்கத்தில் நடந்தது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார்..
சௌபினின் அட்டகாசமான நடனம்: சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது. தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார். பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமனின் பேச்சு என அத்தனையுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆகஸ்ட் 10ம் தேதி: முக்கியமாக ரஜினிகாந்த் மிகவும் அருமையாக பேசியிருந்தார். லோகேஷ், நெல்சன் என பலரையும் கலாய்த்து தள்ளியிருந்த அவர் தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அவை அனைத்தையுமே நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் ரசித்தார்கள். சூழல் இப்படி இருக்க ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் பத்தாம் தேதியிலிருந்து சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











