ரஜினிகாந்த்தின் கூலி.. அடேங்கப்பா ஓவர்சீஸ் உரிமம் இத்தனை கோடி ரூபாயா?.. ஆச்சரியத்தில் கோலிவுட்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் கூலி படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். முக்கியமாக லோகேஷின் படம் என்பதும்; எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் கூலி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படத்துக்கு முன்பாக வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவரது சாம்ராஜ்ஜியம் சாய்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட சூழலில்; ஜெயிலர் படம் அந்தப் பேச்சை மாற்றி வைத்தது. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக அவர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கூலி கூட்டணி: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் கமிட்டானார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Rajinikanth s Coolie overseas Business earns Rs 80 crore

லோகேஷுக்கும் முக்கியமான படம்: அதேபோல் லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் இயக்கிய படங்களில் லியோ திரைப்படம்தான் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதன் காரணமாக அந்தப் பெயரை கூலி படத்தில் மாற்ற வேண்டுமென்ற முனைப்பில் உழைத்துவருகிறார் அவர். இதற்காக ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து அவர் செதுக்கியிருப்பதாகவும்; கமல் ஹாசனுக்கு கொடுத்ததுபோல் ரஜினிக்கும் மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டுமென்றும் அவர் நினைப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

வெளியான வீடியோ: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும்போது யூனிட் ஆட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியாவது நின்றது.

எப்போது ரிலீஸ்: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்புகூட அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக ரஜினிகாந்த்தை இதில் வேறு மாதிரிதான் காண்பிக்கப்போகிறேன் என்பதை லோகேஷ் க்ளியராக மேக்கிங் வீடியோவில் உணர்த்திவிட்டார் என்றும் ஃபேன்ஸிடமிருந்து கமெண்ட்ஸ் பறக்கின்றன.

படம் பற்றிய புதிய தகவல்: இந்நிலையில் கூலி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, கூலி படத்தின் வெளிநாட்டு உரிமத்தை முன்னணி நிறுவனம் ஒன்று 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவெடுத்திருப்பதாகவும்; ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த நிறுவனம் கேட்ட தொகைக்கு படத்தை கொடுக்கலாமா என்று யோசனையில் இருப்பதால்; இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட திரையுலகமோ ஓவர் சீஸ் உரிமையே 80 கோடி ரூபாய் வியாபாரமா என ஆச்சரியத்தில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X