Vettaiyan: காக்கிச் சட்டையில் காளையன்.. லீக்கான வேட்டையன் கெட்டப்.. இவ்ளோ வீடியோ வெளியாகிடுச்சே!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. லைகா தயாரிப்பு ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார்.
மேலும், விக்ரம் மற்றும் மாமன்னன் படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகர் பகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி, அசுரன், துணிவு மற்றும் விடுதலை 2 படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் மட்டுமின்றி துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் வேட்டையன் படத்தில் இணைந்துள்ளனர்.

மீண்டும் போலீஸ் கெட்டப்: ஜெயிலர் படத்தில் பிளாஷ் பேக் ஆட்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ரஜினிகாந்த் மீண்டும் வேட்டையின் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் அறிமுக டீசரில் சாதாரண சட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான கூலிங் கிளாசை செம ஸ்டைலாக அணியும் வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
காக்கிச்சட்டையில் ரஜினிகாந்த்: மூன்று முகம் படத்தில் காக்கி சட்டை அணிந்து படு கெத்தாக நடித்த ரஜினிகாந்த் தர்பார் படத்திலும் காக்கி சட்டை அணிந்து இருந்தார். ஆனால் அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே உள்ள நிலையில் வேட்டையன் படத்தின் கதையிலும் ரஜினிக்கு காக்கிச்சட்டை மாட்டும் வேலை இருப்பதால் உடனடியாக ஓகே சொல்லி அந்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு காக்கி சட்டை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் கெத்தாக செல்லும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன.
செம ஸ்பீடு: தொடர்ந்து வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வரும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. சமீப காலமாக விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ரசிகர்களை கவரும் விதமாக படப்பிடிப்பு தளங்களில் கெட்டப்புகளை ரகசியமாக வைத்திருக்கும் ஐடியாவை எல்லாம் விட்டு விட்டு ரசிகர்களுடன் சகஜமாக படத்தின் லுக்கிலேயே போஸ் கொடுத்து வரும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. அந்த வீடியோவில் காக்கிச் சட்டை உடையில் காவல் அதிகாரியாக செம யங்கான லுக்கில் ரஜினிகாந்த் அதி வேகமாக நடந்து செல்கிறார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











