ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்.. சூழ்ந்த ரசிகர்கள்.. ரஜினிகாந்த் என்ன செஞ்சாரு பாருங்க
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரவி வசந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இந்தச் சூழலில் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிவருகிறது. படத்தின் ஷூட்டிங் அட்டப்பாடியில் மும்முரமாக நடந்துவரும் சூழலில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் அந்தப் படத்துக்கு முன்னதாகவே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதனையடுத்து டிவி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு சென்றுவிட்ட நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலாவை இயக்கினார். படம் மெகா ஹிட்டானது. முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குநராக மாறிவிட்டார்.
சிவகார்த்திகேயனுக்கு செம படம்: அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றதைத் தொடர்ந்து டாப் ஹீரோவான விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் அவர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் அந்தப் படம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டானார் நெல்சன். பீஸ்ட் படம் கடுமையாக ரோஸ்ட் ஆனதன் காரணமாக ரஜினிகாந்த்தையும் வைத்து செய்துவிடுவாரோ என்று ரஜினியின் ரசிகர்கள் உச்சக்கட்ட அச்சத்தில் இருந்தார்கள். மேலும் இந்தப் படத்தின் கதை விவாதத்தில் கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின.மேலும் நெல்சன் மீது ரஜினிகாந்த்துக்கு நம்பிக்கையே இல்லை என்ற வதந்தியும் பரவியது.

மெகா ப்ளாக் பஸ்டர்: ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது பின்னர் உறுதியானது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. காமெடி, ஆக்ஷன், செண்ட்டிமெண்ட் என அத்தனையிலும் கலக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். படமும் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. ரஜினிகாந்த்துக்கும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு மெகா ஹிட் கிடைத்ததால் நெல்சனை உச்சக்கட்டமாக கொண்டாடினார்கள் ரஜினியின் ரசிகர்கள். ஆனால் அடுத்ததாக ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
ஜெயிலர் 2: வேட்டையனுக்கு பிறகு கூலி படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2வில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என முதல் பாகத்தில் நடித்தவர்களும் கமிட்டாகியிருக்கிறார்கள். சமீபத்தில்கூட ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் 2 ஷூட்டிங்கின் முதல் நாளில் கலந்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஷூட்டிங் நடந்துவரும் அட்டப்பாடியில் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அவரது ரசிகர்கள் கூடிவிட்டனர். அதை அறிந்த ரஜினிகாந்த் ஹோட்டலுக்குள் செல்லும்போது காரிலிருந்து இறங்கி ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்துவிட்டு சென்றார். அதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் தலைவா, தலைவா என்று கூக்குரலிட்டனர்.


Click it and Unblock the Notifications











