ரஜினிகாந்தின் உள்குத்து.. அஜித்துக்காக சொன்னாரா.. இல்லை விஜய்க்காகவா?.. இது எப்படி இருக்கு!
சென்னை: எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ரஜினிகாந்த் பாட்ஷா படத்தின் வசனத்தை புத்தாண்டு அன்று வாழ்த்து செய்தியாக வெளியிட்டது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வராமல் தள்ளிப்போன நிலையில் தான் அஜித் ரசிகர்களுக்கு மறைமுகமாக சூப்பர் ஸ்டார் இப்படியொரு ஆறுதலை கூறியுள்ளார் என சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ரஜினிகாந்த் தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வாழ்த்து செய்தி தான் அது என்றும் 2025ம் ஆண்டு கண்டிப்பாக பெரிய வேட்டையை செய்யப் போவது உறுதி என்பதை தனது ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த் என்றே தோன்றுகிறது.

ரஜினிகாந்த் - அஜித் மியூச்சுவல் ரசிகர்கள் தான் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு ஆறுதல் அடைந்து வருகின்றனர் என்றும் சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் பறக்கின்றன. அதில், விஜய்க்கான உள்குத்தும் உள்ளதாக கூறுவது தான் பகீர் கிளப்பியுள்ளது.
ரஜினியின் உள்குத்து: "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்." என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடித்து வெளியான பாட்ஷா படத்தின் வசனத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆனால், இது வழக்கமான புத்தாண்டு வாழ்த்துக்கள் இல்லையே இதற்கு பின்னால் ஏதோ விஷயம் இருக்கு என பிரபலங்களும் ரசிகர்களும் சினிமா வட்டாரங்களும் டீகோட் செய்து ஆளுக்கொரு கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அஜித்துக்காக சொன்னாரா?: லைகா தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் பொங்கல் போட்டியில் இருந்து பின் வாங்கியுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் புத்தாண்டு அதுவுமாக அப்செட் ஆகியுள்ள நிலையில், லைகா தயாரிப்பில் லால் சலாம், வேட்டையன் படங்களில் நடித்த ரஜினிகாந்த் லைகா மற்றும் அஜித் குமாருக்கு ஆதரவாக இந்த ஆறுதல் கருத்தை தெரிவித்துள்ளார் என அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
தனக்குத்தானே சொல்லிக் கொண்டாரா?: கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சுற்றி உலா வந்தன. அதே போல ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் திரைப்படமும் வசூலில் அடிவாங்கி விட்டதாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களின் டாப் 10 அதிக வசூல் செய்த படங்களே உறுதி செய்த நிலையில், இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படம் நிச்சயம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்பதை தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தவே ரஜினிகாந்த் இப்படியொரு வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன.

விஜய்க்கு எதிராக: கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விஜய்யின் கோட் திரைப்படம் மற்றும் கில்லி ரீ ரிலிஸ் அதிக வசுலை ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு தளபதி 69 படமும் ரஜினிகாந்தின் கூலி படத்துடன் போட்டியாக வெளியாகிறது. மேலும், அரசியலிலும் விஜய் நுழைந்துள்ள நிலையில், ”கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.” என்கிற வசனத்தை ரஜினிகாந்த் உள்குத்துடன் சொல்லியிருக்கிறார் என்றும் புது பூதத்தை கிளப்பி உள்ளனர். ரஜினிகாந்தின் பாட்ஷா 2 திரைப்படம் இந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் வரப்போகிறது. அதற்கான அஸ்திவாரம் தான் இது மற்றபடி எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீக்கிரமே ரஜினிகாந்த் சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











