சமையல்காரரால் ரஜினிக்கு இப்படி ஒரு சோதனை வந்ததா?.. இது வேற நடந்திருக்கா?.. ரசிகர்கள் ஷாக்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சாதாரணமானவர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள்தான். ஏனெனில் தனது தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடிப்பு என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் அதகளம் செய்பவர். சினிமா துறைக்கு வருபவர்கள் எப்போதும் ரஜினிகாந்த்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டதுண்டு.

வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோலில் நடித்தார்) படம் வெளியானது. அதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் ரிலீஸ்வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலில் ஆடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சிம்மாசனத்திலிருந்து ரஜினி இறக்கப்படுவார் என்றும் பலர் பேசினார்கள். ஆனால் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி எப்போது ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களை பேச வைத்தது. ஆனால் அடுத்து நடித்த லால் சலாம் சறுக்கிவிட்டது. இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அவர்.
கூலி: அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் இயக்குவதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் பிரமாண்ட ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் கூலியும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ட்ரெண்டிங்கில் ரஜினிகாந்த்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர் நடந்த முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த். அப்போது அட்டகாசமான நடனத்தை ஆடினார் அவர். பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அமைதியாக இருக்கும் அவர்; அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடனம் ஆடியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் படு ட்ரெண்டானது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில், "ஒருமுறை திருமணத்துக்கு நானும் மனைவியும் சென்றிருந்தோம். அங்கு பரிமாறப்பட்ட சாப்பாட்டின் சுவை சூப்பராக இருந்தது. உடனே யார் சமையல்காரர் என்று விசாரித்தோம். அவரது பெயர் நாராயணன். உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு வந்து சமைப்பீர்களா என்று கேட்டதற்கு அவரும் ஒத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சமைக்க தொடங்கினார்.
எகிறிய பிபி: வீட்டில் வந்தும் சுவையோடு சமைத்தார். அதுவரை அப்படி ஒரு டேஸ்ட்டில் சாப்பிட்டதே இல்லை. அதேசமயம் எனக்கு ரத்த அழுத்தமும் எகிறிக்கொண்டே இருந்தது. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஒருமுறை எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டார். அப்போது அவர், 'எப்படி இவ்வளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்டார். அப்போதுதான் புரிந்தது எனக்கு ரத்த அழுத்தம் வந்ததற்கு காரணமே அந்த சாப்பாடுதான் என்று. பிறகு அந்த சமையல்காரரை வேலையை விட்டு நிறுத்திவிட்டோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











