படப்பிடிப்பில் வலியால் துடித்த அஜித்... கண்கலங்கிய ராஜ்கிரண்!
சென்னை : நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இப்பொழுது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது
ஹெச் வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணியில் மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்பட்டு ஹாலிவுட் தரத்தில் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி வெற்றி பெற்றது வலிமை.
இந்த நிலையில் கிரீடம் படப்பிடிப்பில் அஜித் வலியால் துடித்ததை பார்த்த நடிகர் ராஜ்கிரண் கலங்கியவாறு பகிர்ந்துள்ளார்

மெகா ஹிட் வெற்றி
அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கின்ற வகையில் அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் விஸ்வாசம் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை வெளியாகி வெற்றி பெற்றது.

ஹாலிவுட் தரத்தில் ஸ்டண்ட் காட்சிகள்
ஹெச் வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் இணைந்த படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக ஹாலிவுட் தரத்தில் ஸ்டண்ட் காட்சிகள் உடன் உருவாகி வந்த இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின் வெற்றிகரமாக வெளியானது. இதுவரை அஜித்தின் எந்த ஒரு படத்திலும் இல்லாத அளவிற்கு சண்டைக் காட்சிகள் அனைவரையும் பிரமிக்கும் வகையில் இருந்தது .

கிரீடம்
வலிமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு முன்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்த படம் கிரீடம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கிரீடம் தமிழிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 2007ல் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு தந்தையாக நடிகர் ராஜ்கிரண் நடித்திருப்பார்.

வலியில் துடித்த அஜித்
மிகவும் எதார்த்தக் கதை களத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் ஒருநாள் கிரீடம் படப்பிடிப்பில் ஷாட் முடிந்ததும் அஜித் உட்காராமல் நடந்து கொண்டே இருந்துள்ளார். அதைப் பார்த்த ராஜ்கிரண் உட்காருங்க என கேட்டதற்கு இல்ல சார் முதுகு பயங்கர வலியா இருக்கு எனக் கூறியுள்ளார். அப்போதுதான் புரிந்தது அவருக்கு முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்து பிரச்சினை உள்ளது என்று. அவ்வளவு வலியிலும் அஜித் படப்பிடிப்பில் அசராது நடித்ததை பார்த்த ராஜ்கிரண் கண்கலங்கி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











