»   »  தாரிகா-உமா-ராம்

தாரிகா-உமா-ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு நல்ல நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்க திருவள்ளுவர் காரணமாகஇருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் இலக்கணம்படத்தின் ஹீரோ ராமிடம் கேட்டால் அப்படித்தான் சொல்கிறார்.

ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமல் வெளிவந்த படம்தான் இலக்கணம். படத்தின்தலைப்பிலிருந்து வசனங்கள், பாடல்கள் என எதிலுமே ஆங்கிலத்தைத் தலைதூக்கவிடாமல் தமிழில் விளையாடியிருந்த படம்.

இப்படத்தில் குத்துப் பாட்டு கிடையாது. ஆபாச வசனங்கள் கிடையாது, டபுள் மீனிங்,டிரிபிள் மீனிங் காட்சிகள் கூட கிடையாது. கவர்ச்சி கன்னி தாரிகாவைக் கூட படுபாந்தமாக, சேலையில் உலவ விட்டிருந்தனர். குடும்பக் குத்துவிளக்கு என முத்திரைகுத்தப்பட்ட உமாதான் படத்தின் நாயகி.

இந்தப் படத்தை பாராட்டிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட படத்திற்குஇசையமைத்த பவதாரணியைப் பாராட்டி பரிசும் கொடுத்தார். இப்படத்தில்ஹீரோவாக நடித்தவர் ராம். அருமையான நடிப்புக்காக பாராட்டு மழையில் குளித்துவருகிறார்.

படம் சரியாக ஓடாவிட்டாலும் (நல்ல தமிழாச்சே.. நம்மவர்கள் ஓட விடுவார்களா?)கூட நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இந்ப் படத்தில் ஹீரோவாக நடிக்க தனக்குவாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என கூறுகிறார் ராம். எப்படி.?

பசுபதி, கலைராணி உள்ளிட்ட பல சிறந்த கலைஞர்களை தமிழ் சினிமாவுக்குகொடுத்த கூத்துப்பட்டறையில்தான் நடிப்புப் பயிற்சி பெற்றார் ராம். இலக்கணம் படம்குறித்த தகவல் அறிந்ததும் அதில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்றார்.

இயக்குனர் சந்திரசெயனை பார்த்து வாய்ப்பு கேட்டபோது, அவர் ராமை உட்காரவைத்து இரண்டே இரண்டு கேள்விகள்தான் கேட்டாராம். அதாவது, பாரதியின் ஒருபாடல், திருக்குறளிலிருந்து இரண்டு குறள்களை மட்டும் சொல்லுங்கள். நீங்கள்தான்ஹீரோ என்று கூறியுள்ளார்.

அவர் கேட்ட அடுத்த விநாடியே இரண்டு குறள்களையும், பாரதியாரின் ஒருபாடலையும் மடை திறந்த வெள்ளமென கொட்டியுள்ளார் ராம்.

சந்தோஷமடைந்த செயன் உடனடியாக மேக்கப் டெஸ்ட் வைத்து அதில் தேறியவுடன்நீங்கள்தான் எங்கள் படத்தின் நாயகன் என்று கூறி கை குலுக்கினாராம்.

இப்ப சொல்லுங்க எனக்கு வாய்ப்பு வாங்கித் தந்தது வள்ளுவரும், பாரதியும்தானேஎன்று புன்னகையுடன் கேட்கிறார் ராம்.

இப்போது ராம் கையில் இரண்டு புதுப் படங்கள் இருக்கின்றன. ஆஸ்கர் பிலிம்ஸின்யாழ்ப்பாணம் படமும் இதில் ஒன்று.

வாழ்க வளமுடன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil