வெப்தொடரில் அறிமுகமாகும் ராம்சரண்.. அதுவும் அந்த பிரம்மாண்ட அமெரிக்க தொடரின் ரீமேக்கிலா?
சென்னை: டோலிவுட்டின் டாப் ஹீரோ ராம்சரண் விரைவில் வெப்தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்கள் ஒடிடியில் வெளியாகும் வெப்தொடர்களில் நடித்து வரும் நிலையில், ராம்சரண் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள ஒரு வெப்தொடரில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள RRR திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ராஜமெளலியின் இன்னொரு பிரம்மாண்ட புராஜெக்ட் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

சிரஞ்சீவி மகன்
தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் தான் ராம்சரண் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சிறுத்த (தெலுங்கு) படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ராம்சரண் அப்பா சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். RRR படத்தைத் தொடர்ந்து அந்த படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெகா பாக்ஸ் ஆஃபிஸ்
பாகுபலி படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள RRR திரைப்படம் அடுத்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாகுபலி படங்கள் மூலம் 1000 கோடி வசூலை அசால்ட்டாக தாண்டிய ராஜமெளலி RRR படத்தின் மூலம் என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் உற்றுநோக்கி பார்த்து வருகிறது.

வெப்தொடரில் ராம்சரண்
RRR, ஆச்சார்யா, ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பெரிய லைன் அப்களை வைத்துள்ள நடிகர் ராம்சரண் ஒடிடியில் விரைவில் உருவாகவுள்ள பிரம்மாண்ட வெப் தொடரில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையை பிடிக்க பல பெரிய ஒடிடி நிறுவனங்கள் முன்னணி நடிகர்களை வெப் தொடர்களில் நடிக்க வைத்து வருகின்றனர்.

அமெரிக்க தொடரின் ரீமேக்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரா வெப் தொடர் ஹாலிவுட்டில் வெளியான லூதர் எனும் வெப் தொடரின் ரீமேக் தான். இந்நிலையில், அதே போல அமெரிக்காவில் பிரபலமடைந்த மிகப்பெரிய வெப் தொடர் ஒன்றின் ரீமேக்கில் தான் ராம்சரணை நடிக்க வைக்க பிரபல ஒடிடி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

க்ரீன் சிக்னல்
நடிகர் ராம்சரணும் அந்த வெப்தொடரில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், அந்த ஒடிடி தொடர் தொடர்பான அறிவிப்பு பெரிய அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. RRR படம் வெளியான உடனே அந்த வெப் தொடர் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











