பான் இந்தியாவை குலுக்கும் ராம் சரணின் “பெத்தி” டிரைலர் ரிலீஸ்!
சென்னை: நடிகர் ராம் சரண் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான "பெத்தி"யின் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் Buchi Babu Sana இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கிராமத்து பின்னணியில் ஆக்ஷன், விளையாட்டு, உணர்ச்சி ஆகிய மூன்றையும் இணைத்த மாபெரும் படமாக உருவாகியுள்ளது. விருத்தி சினிமாஸ் தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.

பெத்தி: டிரெய்லர் ஆரம்பிக்கும் அதிவேகமாக வரும் ரயில்லை சிவப்பு கொடி காட்டி ஒருவர் அவசரமாக நிறுத்த சொல்கிறார். அதைத் தொடர்ந்து படத்தின் ஹீரோவான ராம் சரண் மைதானத்தில் பந்தை விளாசி தள்ளுவதுடன் டிரைலர் சுவாரசியம் அடைகிறது. கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் தனது உடல் வலிமையாலும் கடின உழைப்பாலும் சாதிக்கும் வீரராக ராம் சரண் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக கிரிக்கெட் மைதானத்தில் வெடிக்கும் மாஸ் தருணங்களும், சேறு கலந்த மல்யுத்த காட்சிகளும் திரையரங்கில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் அமைந்துள்ளன. ரயில் நிலையத்தில் நடக்கும் பிரம்மாண்ட சண்டை காட்சி மற்றும் இயல்பை மீறும் ஆக்ஷன் ஸ்டண்ட்கள் டிரெய்லரின் ஹைலைட்டாக பேசப்படுகிறது.
ராம் சரண்: "RRR" திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு ராம் சரண் தேர்வு செய்யும் கதைகளில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவே "பெத்தி" படம் பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டதுடன், கிராமத்து உடல் மொழி மற்றும் விளையாட்டு வீரரின் மனநிலையையும் தீவிரமாக பயிற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது கதாபாத்திரத்திற்காக பல மாதங்கள் கிரிக்கெட் மற்றும் மல்யுத்த பயிற்சியும் செய்து இருக்கிறார் ராம் சரண்.
அட்டகாசமான படம்: ஜான்வி கபூரின் பாரம்பரிய நளினமும் கலந்த கதாபாத்திரத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதேபோல் ஷிவராஜ் குமார், ஜனுபதி பாபு, பொம்மன் இரானி என பலர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். ரத்தினவேலுவின் ஒளிப்பதிவில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் டிரெய்லரின் ஒவ்வொரு இசையும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் "பெத்தி" ஒரு சாதாரண ஸ்போர்ட்ஸ் படமாக மட்மில்லாமல், உணர்ச்சி, ஆக்ஷன், கிராமத்து பெருமை மற்றும் மனிதனின் போராட்டத்தை இணைக்கும் மாபெரும் படமாக இருக்கும் என்பது டிரைலரை பார்க்கும் போதே தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications