Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
துணை குடியரசுத் தலைவரை கொரியர் மேன் என்பதா? ரஜினியை கலாய்க்க நினைத்து சிக்கிய ராம் கோபால் வர்மா!
ஹைதராபாத்: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கிய நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா போட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Recommended Video
சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு அடிக்கடி சிக்கலில் சிக்கி வரும் ராம் கோபால் வர்மா இந்த முறை துணை குடியரசுத் தலைவர் குறித்தும் தாதா சாகேப் பால்கே விருது குறித்தும் கிண்டலாக பதிவிட்ட ட்வீட் பிரச்சனை உருவாக்கி உள்ளது.
ஏகப்பட்ட நெட்டிசன்கள் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை கண்டித்து வருகின்றனர்.
புதிய
படத்தில்
ஒப்பந்தமான
நடிகர்
ஆர்யா...
ஹீரோயின்
யாருன்னு
பாருங்க!

67வது தேசிய விருது
67வது தேசிய விருது நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, அந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் என மூவரும் தேசிய விருதுகளை பெற்றனர். விஜய்சேதுபதி, பார்த்திபன், இமான் என தமிழ் சினிமா பிரபலங்களின் ஆளுமை தேசிய விருது விழா நிகழ்ச்சியில் எதிரொலித்தது.

தாதா சாகேப் பால்கே விருது
சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பான பணியை ஆற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 67வது தேசிய விருதுகள் விழா நிகழ்ச்சியில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் தேசிய விருது பெற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

சர்ச்சை ட்வீட்
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா அந்த புகைப்படத்தை பதிவிட்டு போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் ராம் கோபால் வர்மாவை விளாசி வருகின்றனர்.

விருது கொடுத்த ரஜினி
தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதை கிண்டல் செய்ய நினைத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா ரஜிகாந்த் தாதா சாகேப் பால்கேவுக்கு இந்த விருதை கொடுத்தார் என ட்வீட் போட்டு அலப்பறை செய்துள்ளார். மேலும், அதில் அவர் குறிப்பிட்ட இன்னொரு விஷயம் தான் பிரச்சனையை கிளப்பி உள்ளது.

கொரியர் மேன்
பொதுவாக குடியரசுத் தலைவர்கள் தான் தேசிய விருதுகளை வழங்கி வந்தனர். ஆனால், சமீப காலமாக துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தேசிய விருதுகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா தாதா சாகேப் பால்கேவுக்கு கொரியர் மேன் மூலமாக ரஜினி விருது கொடுத்தார் என பதிவிட்டு இருப்பதற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.