நளினியுடன் மீண்டும் இணைந்துவிட்டாரா ராமராஜன்?.. முடிந்தது முடிந்ததுதானாம்.. உறுதியாக சொல்லிட்டாரே
சென்னை: ராமராஜன் ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சூழல் இப்படி இருக்க ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தச் சூழலில் நளினி குறித்து ராமராஜன் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக கோலோச்சியிருந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராமராஜன். உயரம் கம்மியான உருவம், சினிமாவுக்குரிய இலக்கணம் இல்லாத உடல்வாகு என முத்திரை குத்தப்பட்டாலும் தனது திறமையால் முன்னேறியவர் ராமராஜன். கிராமத்து பக்கம் அவருக்கென்று ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக நமது வீட்டில் இருக்கும் ஒருவர் போல் அவர் இருந்ததால் ரசிகர்கள் அவரை எளிதாக ஏற்றுக்கொண்டனர்.
மெகா ஹிட்: ராமராஜனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் என்றால் அது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் ஜானரில்தான் உருவாகியிருந்தது. ஆனால் அதில் விஷேஷம் என்னவென்றால் இதில் எடுத்துக்கொண்ட மையக்கரு கரகாட்டம். கிராமங்கள் பக்கம் கொண்டாடப்படும் கரகாட்டத்தை கதையின் கருவாக வைத்து; ஹீரோ, ஹீரோயினை கரகாட்ட கலைஞர்களாக காண்பித்திருந்ததால் படம் மெகா ஹிட்டானது.

கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு அவரது கிராஃப் உச்சத்துக்கு சென்றது. ரஜினி,கமலுக்கு இணையாக அவருக்கும் ரசிகர்கள் சேர்ந்தனர். கரகாட்டக்காரனுக்கு பின்பு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. அந்த சமயத்தில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் ஜோசியம்தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நல்லது இல்லை என்று ஜோதிடக்காரர் ஒருவர் சொன்னதாகவும்; அதனாலதான் அவர்களது விவாகரத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
ரீ என்ட்ரி கொடுத்த ராமராஜன்: அதேசமயம் ராமராஜன், நளினி திருமணத்துக்கு நளினி வீட்டிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இருந்தாலும் அந்த எதிர்ப்பை எல்லாம் மீறித்தான் இரண்டு பெரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார்கள். ஆனால் பிரிந்துவிட்டார்கள். நடிப்பிலிருந்து ஒதுங்கிய ராமராஜன் அரசியலிலும் கவனம் செலுத்தினார். இந்தச் சூழலில் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
இன்னமும் காதல்தான்: சூழல் இப்படி இருக்க அண்மயில் நளினி ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் தான் இன்னமும் ராமராஜனை காதலித்துவருகிறேன். மரியாதையும் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நளினியும், ராமராஜனும் இணைந்துவிட்டார்கள் என்று தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில் அதுகுறித்து ராமராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கமளித்திருக்கிறார்.
ராமராஜனின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நானும் நளினியும் இணைந்துவிட்டோம் என்று சிலர் பேசுகிறார்கள். நடக்காத விஷயத்தை நடந்த மாதிரி பேசுவதில் சிலருக்கு என்ன ஆனந்தமோ தெரியவில்லை. நான் தனிமையாக வாழ்வதற்கு பழகிவிட்டேன். நாங்கள் சேர்ந்துவிட்டதாக மீண்டும் சொல்வது எங்கள் இரண்டு பேருக்குமே பெரிய மன துயரத்தை கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் நளினிக்கும் எல்லாம் முடிந்துவிட்டது. முடிந்தது முடிந்ததுதான். இனிமேல் இப்படி இட்டுக்கட்டி பேசுவதை இந்றுத்திக்கொள்ளுங்கள். சேர்ந்துவிட்டோம் என்று வதந்திகளை பரப்பாதீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











