»   »  ராமராஜனின் பிடிவாதம் !

ராமராஜனின் பிடிவாதம் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடித்தால் ஹீரேவாக மட்டுமே நடிப்பேன், சாதா ரோலிலோ அல்லது டிவி தொடர்களிலோ நடிக்க மாட்டேன் என்று தமிழ்சினிமாவின் முதல் "கோடீஸ்வர" நாயகனான ராமராஜன் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் கமல், ரஜினியை மிஞ்சிய ஹீரோவாக திகழ்ந்தவர் ராமராஜன். பட்டா பட்டி டிரவுசர், அழுக்குப் பனியன், சிலநேரங்களில் அதுவும் இல்லாமல் பேர் பாடியுடன், ஆடு, மாடுகளுடன் படு சுதந்திரமாக ஆடி, ஓடி நடித்துக் கலக்கிக்கொண்டிருந்தார் ராமராஜன்.

எப்போதும் பசுக்களும் அவை சார்ந்த சூழலிலும் வலம் வந்ததால் பசு நேசன் என்று எதார்த்தமாகவும், டிரவுசருடன் வந்துபோனதால் டிரவுசர் என்று பதார்த்தமாகவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ராமராஜன்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக 1 கோடி ரூபாயை முழுசாக சம்பளம் வாங்கி சாதனை படைத்தவர். கரகாட்டக்காரன் படம்மூலம் உச்சத்திற்குச் சென்ற ராமராஜன், அதன் பின்னர் வேகமாக முன்னேறி பல படங்களில் நடித்தார்.

ஆனால் இளையராஜாவுடன் அவரது கூட்டணி முறிந்ததால், படு வேகமாக கீழே இறங்கி, இப்போது காணாமலேயே போய்விட்டார்.

காலம் மாறிப் போய் டேஸ்ட்டும் மாறிப் போய்விட்டது. விஜய், அஜீத் என பல கோடீஸ்வரர்கள் வந்து விட்டார்கள். இப்போதுராமராஜனை சீண்ட ஆளில்லை!

சம்பாதித்த காலத்தில் மதுரையில் நடனா, நாட்டியா, நர்த்தனா தியேட்டர் காம்ப்ளெக்ஸ் உள்பட பல இடங்களில் சொத்துக்களைவாங்கிக் குவித்தார் ராமராஜன். ஆனால், சொந்தப் படம் எடுக்கிறேன் என்று ஆழம் தெரியாமல் கால் வைத்து இருந்ததை எல்லாம்இழந்தார்.

அடுத்து காதல் மனைவி நளினியையும் பிரிந்தார். அதன் பின்னர்தான் அவரது வாழ்க்கை நிலை படு மோசமானது.

சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அவல நிலையில் ராமராஜன் இருப்பதாக கூறப்பட்டது.

ஜெயலலிதாவை சந்தித்து உதவி பெறவும், மீண்டும் அரசியலில் வாழ்வு பெறவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந் நிலையில் அவரது திரையுலக நண்பர்கள் பலரும் ராமராஜனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட நிலையில் வடிவேலுபோன்ற ஒரு சிலர் தான் பண உதவி செய்து வருகிறார்களாம். இதனால் வண்டி ஒரு மாதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந் நிலையில்தான் ராமராஜனை அணுகிய அவரது நண்பர்கள் சிலர், பேசாமல் டிவி தொடர்களில் நடிக்கலாமே, உங்களதுமனைவி நளினி கூட இப்போது நிறைய சீயல்களில் நடித்து கை நிறைய சம்பாதிக்கிறாரே என்று அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டிய ராமராஜன், அது மட்டும் என்னால் முடியவே முடியாது. நடித்தால்சினிமாவில்தான், அதிலும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். வேறு எந்த ரோலிலும் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டாராம்.

என்னுடைய காலம் மீண்டும் வரும், ராமராஜனுக்கென்று உள்ள கேரக்டர்கள் அழிந்து போகாது, அவை சாகாவரம் பெற்றகேரக்டர்கள், அந்தக் கேரக்டர்கள் வரும் வரை காத்திருப்பேன் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறாராம் ராமராஜன்.

ம்...!!


Read more about: ramarajan wants hero roles

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil