ராம்சுக்கு கைகொடுக்கும் வைகைஸ் கஷ்டத்தில் இருக்கும் ராமராஜனுக்கு பண உதவி மட்டுமல்லாது, பட ரீதியாகவும் கை கொடுக்கப் போகிறார் வைகைப் புயல்வடிவேலு.ஒரு காலத்தில் உச்சத்தில் உட்கார்ந்திருந்தவர் ராமராஜன். ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் அட்டகாசமாக அமர்ந்து அத்தனைபேரையும் ஆச்சரியப்படுத்தியவர் ராமராஜன். ஒரு கோடி வரை சம்பளத்தைத் தொட்டு சாதனை படைத்தவர். நம்ம ஊரு எம்.ஜி.ஆர். என்று தமிழக கிராம மக்களால் அன்புடன் பார்க்கப்பட்டவர், பசு நேசன், டவுசர் என்ற செல்லப்பெயர்களாலும் ரசிக்கப்பட்டவர். இப்படியாப்பட்ட ராமராஜன் காலப் போக்கில் காணாமல் போய் இப்போது மிகவும் கஷ்டகாலத்தில் இருக்கிறார்.உச்ச நடிகராகவும், எம்.பியாகவும் இருந்து வந்த ராமராஜன் இப்போது சாப்பாட்டுக்கே சிரமப்படும் மோசமான நிலையில் இருந்துவருகிறார். சில நடிகர்கள் அவருக்கு அவ்வப்போது பணம் கொடுத்து உதவுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் வடிவேலுவும் ஒருவர். சிரம நிலையில் இருந்து வந்த ராமராஜன் தற்போது மனதளவில் நன்றாகத் தேறிவிட்டார். இதனால் புதிதாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கப் போகும் படம் தர்மன்.இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என்று உற்சாகமாக கூறுகிறார் ராமராஜன். இடையில் ஏற்பட்ட சறுக்கலால்நான் சோர்ந்து போனது உண்மைதான். ஆனால் இப்போது மனதளவில் தேறி விட்டேன்.விரைவில் மீண்டும் சாதிப்பேன் என்கிறார் ராமராஜன். ராமராஜனுக்கு இப்படத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கப் போவதுவடிவேலு. எப்படி கரகாட்டக்காரனில் கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து கலக்கி படத்தை தூக்கி நிறுத்தினார்களோ,அதேபோல, தர்மன் படத்திலும் வடிவேலுவின் காமடி தூக்கலாக இருக்கும் என்கிறார்கள்.மேலும், ராமராஜனுக்காக இந்தப் படத்தில் நடிக்க மிகக் குறைச்சலான சம்பளத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறாராம் வடிவேலு.ராமராஜனுக்கு ஒரு லிப்ட் கொடுக்க நான் பயன்படுவது சந்தோஷம் என்றும் கூறியுள்ளாராம் வடிவேலு. மதுரைக்காரவுக ஒன்னாச் சேர்ந்தாச்சுல்ல, இனி அலப்பற தான்னே..

By Staff

கஷ்டத்தில் இருக்கும் ராமராஜனுக்கு பண உதவி மட்டுமல்லாது, பட ரீதியாகவும் கை கொடுக்கப் போகிறார் வைகைப் புயல்வடிவேலு.

ஒரு காலத்தில் உச்சத்தில் உட்கார்ந்திருந்தவர் ராமராஜன். ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் அட்டகாசமாக அமர்ந்து அத்தனைபேரையும் ஆச்சரியப்படுத்தியவர் ராமராஜன். ஒரு கோடி வரை சம்பளத்தைத் தொட்டு சாதனை படைத்தவர்.

நம்ம ஊரு எம்.ஜி.ஆர். என்று தமிழக கிராம மக்களால் அன்புடன் பார்க்கப்பட்டவர், பசு நேசன், டவுசர் என்ற செல்லப்பெயர்களாலும் ரசிக்கப்பட்டவர். இப்படியாப்பட்ட ராமராஜன் காலப் போக்கில் காணாமல் போய் இப்போது மிகவும் கஷ்டகாலத்தில் இருக்கிறார்.

உச்ச நடிகராகவும், எம்.பியாகவும் இருந்து வந்த ராமராஜன் இப்போது சாப்பாட்டுக்கே சிரமப்படும் மோசமான நிலையில் இருந்துவருகிறார். சில நடிகர்கள் அவருக்கு அவ்வப்போது பணம் கொடுத்து உதவுகிறார்கள்.


அப்படிப்பட்டவர்களில் வடிவேலுவும் ஒருவர். சிரம நிலையில் இருந்து வந்த ராமராஜன் தற்போது மனதளவில் நன்றாகத் தேறிவிட்டார். இதனால் புதிதாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கப் போகும் படம் தர்மன்.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என்று உற்சாகமாக கூறுகிறார் ராமராஜன். இடையில் ஏற்பட்ட சறுக்கலால்நான் சோர்ந்து போனது உண்மைதான். ஆனால் இப்போது மனதளவில் தேறி விட்டேன்.

விரைவில் மீண்டும் சாதிப்பேன் என்கிறார் ராமராஜன். ராமராஜனுக்கு இப்படத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கப் போவதுவடிவேலு. எப்படி கரகாட்டக்காரனில் கவுண்டமணியும், செந்திலும் சேர்ந்து கலக்கி படத்தை தூக்கி நிறுத்தினார்களோ,அதேபோல, தர்மன் படத்திலும் வடிவேலுவின் காமடி தூக்கலாக இருக்கும் என்கிறார்கள்.

மேலும், ராமராஜனுக்காக இந்தப் படத்தில் நடிக்க மிகக் குறைச்சலான சம்பளத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறாராம் வடிவேலு.ராமராஜனுக்கு ஒரு லிப்ட் கொடுக்க நான் பயன்படுவது சந்தோஷம் என்றும் கூறியுள்ளாராம் வடிவேலு.

மதுரைக்காரவுக ஒன்னாச் சேர்ந்தாச்சுல்ல, இனி அலப்பற தான்னே..

Read more about: vadivelu to help ramarajan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X