ஷங்கர், ராம் சரண் இணைந்த RC15… முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு !

சென்னை : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம்சரண் இணைந்துள்ள RC15 படத்தின் முற்கட்ட படப்பிடிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பல மொழிகளில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இப்படத்தில், கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

ராம் சரண்

ராம் சரண்

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நடிகர் ராம்சரண். இவர், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தன்னுடைய 15வது படத்தில் நடித்து வருகிறார்.

RC15

RC15

ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர் தமன்

இசையமைப்பாளர் தமன்

இந்த படம் ராம்சரனின் 15வது திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 50வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது

நடிகை கியாரா அத்வானி

நடிகை கியாரா அத்வானி

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் வினயவிதேயராமா படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பு

முதற்கட்ட படப்பிடிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, சதாரா மற்றும் பால்டன் ஆகிய இடங்களில் RC15 படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஷங்கர் தலைமையிலான ஒட்டுமொத்த நடிகர்களும், படக்குழுவினரும் காட்சிகள் உருவான விதத்தில் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆச்சார்யா

ஆச்சார்யா

கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ராம்சரண், சிரஞ்சீவி நடித்துள்ள படம் ஆச்சார்யா. இப்படத்தில், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில், ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7-ந்தேதி வெளியாக இருப்பதால், ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X